பைசன் காளமாடன்: 2-ஆவது பாடல்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் பைசன் காளமாடன் படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்கள்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ’றெக்க றெக்க..’ எனும் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை மாரி செல்வராஜ், அறிவு இணைந்து எழுதியுள்ளார்கள்.
ஏற்கெனவே, வெளியான ‘தீக்கொழுத்தி’ எனும் முதல்பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் பாடலை மாரி செல்வராஜ் எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.