செய்திகள் :

Lokah: "அப்பா அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்" - 200 கோடி வசூல் பற்றி கல்யாணி ப்ரியதர்ஷன் நெகிழ்ச்சி

post image

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா' திரைப்படம்.

இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடி வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்திருந்தது. தற்போது 13 நாள்களில் 200 கோடியைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த வெற்றிக்காக படக்குழுவினருக்கும், நடிகை கல்யாணிக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணமிருக்கின்றன.

இந்நிலையில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், 200 கோடி வசூல் குறித்து தனது அப்பா அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில், "வெற்றி தலைக்கு ஏறிவிடக்கூடாது, தோல்வி மனதில் ஏற்றிக் கொள்ளக் கூடாது; நான் உனக்கு சொல்லிய அறிவுரைகள இதுதான் சிறந்தது ஒன்று.

கல்யாணி ப்ரியதர்ஷன்

Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?

இதை என்னைக்கும் மறக்காமல் மனதில் பதிச்சு வைச்சுக்கோ. நான் அனுப்பிய இந்த மெசேஜை அழிக்காமல் வச்சுக்கோ" என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார் நடிகை கல்யாணியின் தந்தையும், பிரபல இயக்குநருமான ப்ரியதர்ஷன். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

துல்கர் சல்மான்: Lokah வெற்றியால் தள்ளிப்போகும் காந்தா வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காந்தா. மறைந்த நடிகர் தியாகராய பாகவதர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி இயக... மேலும் பார்க்க

Shweta Menon: "தாய்மார்களுக்கு படப்பிடிப்புத் தளங்களில் வேலை நேர நிர்ணயம் வேண்டும்" - ஸ்வேதா மேனன்

கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார்.கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெ... மேலும் பார்க்க

Grace Antony: 'Finally we made it' - திருமணம் செய்துகொண்ட 'பறந்து போ' நடிகை கிரேஸ் ஆண்டனி

'பறந்து போ' படத்தில் நடித்த மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்று முடிந்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அ... மேலும் பார்க்க

மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் படம்; பாராட்டும் நெட்டிசன்கள்

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது. அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்து... மேலும் பார்க்க

Navya Nair: ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக ரூ. 1.14 லட்சம் அபராதம்; நவ்யா நாயரின் அனுபவப் பகிர்வு

விக்டோரியாவின் மலையாள சங்கம் ஏற்பாடு செய்த ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க மலையாள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மல்லிகைப் பூவை பெண்கள் சூடிக்கொள்வது வ... மேலும் பார்க்க

Lokah: லோகா யூனிவர்ஸில் இணையும் `மலையாள சூப்பர் ஸ்டார்'; இயக்குநரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பல பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நடுத்தர பட்ஜெட்டில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' மலையாளத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் வெற்றி... மேலும் பார்க்க