செய்திகள் :

Mohanlal: நடிகர் மோகன்லாலுக்கு `தாதாசாகேப் பால்கே விருது' மத்திய அரசு அறிவிப்பு!

post image

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால்.

லாலேட்டா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடுபவர்.

1978-ம் ஆண்டு திறநோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தாலும், 1980-ம் ஆண்டு வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கம் படம் இவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

Mohanlal - மோகன்லால்
Mohanlal - மோகன்லால்

சிறந்த நடிகருக்கான 2 விருதுகள் உட்பட 6 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2001-ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஶ்ரீ, 2019-ல் பதம் பூஷண் விருது என திரையுலகினராலும், மத்திய மாநில அரசுகளாலும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர், தயாரிப்பாளர், பிண்ணனிப் பாடகர் எனப் பலத் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறார். இந்த நிலையில்தான் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ``தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது!

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால்

புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார்.

அவரது ஒப்பிடமுடியாத திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றில் உயரிய தரத்தை அமைத்துள்ளன. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Anupama parameswaran: `அழகே அழகே பேரழகே' - அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Lokah: ``லோகா வெற்றிக்குப் பிறகு இந்த அபாயம் இருக்கிறது!'' - ஜீத்து ஜோசப் சொல்வதென்ன?

இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அவர் பகிரும் விஷயங்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.Mirage Movie அப்படி ஒர... மேலும் பார்க்க

Lokah: ``நஷ்டம் ஏற்படும் என நினைத்தோம்!'' - துல்கர் சல்மான்

இயக்குநர் டாமினிக் அருண் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படமான `லோகா' நாடெங்கும் அதிரடி வசூல் புரிந்தது. சூப்பர் ஹீரோவாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, சாண்டி, நஸ்லென் ஆகியோரும் படத்தின் முக்கியக... மேலும் பார்க்க

Lokah: "அப்பா அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்" - 200 கோடி வசூல் பற்றி கல்யாணி ப்ரியதர்ஷன் நெகிழ்ச்சி

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா' திரைப்படம்.இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் த... மேலும் பார்க்க