என்ஜின் கோளாறு! ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரம் நின்ற வந்தே பாரத் ரயில்!
தாதே சாகேப் பால்கே விருது! மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
``திறமை மற்றும் நடிப்பில் பன்முகத் தன்மையின் ஓர் அடையாளம்தான் மோகன்லால். பல்லாண்டுகால தனித்துவமான கலைப் பயணத்தின் மூலம், கேரள கலாசாரத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் மலையாள சினிமா மற்றும் நாடகத்தில் முக்கிய நபராக திகழ்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் அவரின் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற அவருக்கு எனது வாழ்த்துகள். அவரின் வருங்காலச் சாதனைகள், வருங்காலச் சந்ததியினருக்கு ஊக்கமளிக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
65 வயதான மோகன்லால் திரைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு, மோகன்லாலின் திரை வாழ்வில் பொன்னான காலக்கட்டம் எனலாம். அந்த ஓராண்டில் மட்டும், அவர் 34 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
மலையாளத்தில் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் 350க்கும் மேற்பட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் திரைக்கதைக்கு உயிரூட்டிய சாதனைக்காரராவார்.
இதையும் படிக்க:தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்: பிரசாந்த் கிஷோர்