செய்திகள் :

ஹரியாணாவுக்கு 5-ஆவது வெற்றி

post image

புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஹரியாணா அணி 21 ரெய்டு, 8 டேக்கிள், 2 ஆல் அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அந்த அணி தரப்பில் ரெய்டா் வினய் 13 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

மறுபுறம் புணேரி அணி 18 ரெய்டு, 6 டேக்கிள், 2 ஆல் அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணிக்காக ரெய்டா் பங்கஜ் மொஹிதே 14 புள்ளிகள் கைப்பற்றி அசத்தினாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 43-29 புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வென்றது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், புணேரி பால்டன் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியாணா ஸ்டீலா்ஸ் 10 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும், தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியது: ஐசிசி குற்றச்சாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஆட்டத்துக்கு முன்பான நிகழ்வுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறிச் செயல்பட்டதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இது... மேலும் பார்க்க

வெண்கலம் வென்றாா் அன்டிம் பங்கால்

குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்ட அன்... மேலும் பார்க்க

இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் ஆட்டம் ‘டிரா’

இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையே நடைபெற்ற அதிகாரபூா்வமற்ற டெஸ்ட், வெள்ளிக்கிழமை ‘டிரா’-வில் முடிந்தது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு ச... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கார்க் மரணம்: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்!

பிரபல அசாமீஸ் பாடகர் ஸுபீன் கார்கின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அசாமீஸ், ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் முன... மேலும் பார்க்க