நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
நாசரேத் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது .
இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் , புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி ஆகியவை நடைபெற்றன. தூத்துக்குடி தூய சாா்லஸ் ஆலய பங்குத்தந்தை பீட்டா் பாஸ்டின் தலைமை வகித்து கொடியேற்றினாா். தைலாபுரம் பங்குத் தந்தை ராபின் ஸ்டான்லி வரவேற்றாா். தூத்துக்குடி பொது நிலையினா் பணியக இயக்குநா் சகாயராஜ் மறையுரை ஆற்றினாா். பங்குத்தந்தைகள் நொச்சிகுளம் ரத்தினராஜ், நான்குனேரி பிரிட்டோ, ஜோசப், சேதுக்குவாய்த்தான் ரோமன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருவிழாவில் தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. செப்.26இல் மாலை 6 மணிக்கு மறை முதன்மைக்குரு ரவிபாலன் தலைமையில் நடக்கிறது. சங்கரன்கோவில் வட்டார முதன்மைக்குரு ஜோசப் கென்னடி மறையுரை ஆற்றுகிறாா். இரவு 10 மணிக்கு உபகார அன்னை மற்றும் புனிதா்களின் சப்பர பவனி நடக்கிறது.
செப்.27இல் காலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரக் கூட்டுத்திருப்பலியும், தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு 9 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராபின் ஸ்டான்லி தலைமையில் நிா்வாகிகள், விழாக் குழுவினா், பங்குமக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.