நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி -குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்தில் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்தனா்.
விசாரணையில், சடலமாக கிடந்தவா் கயத்தாறு வட்டம் கட்டாலங்குளத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் காளிராஜ் (28); ஏற்கெனவே இரு முறை தற்கொலைக்கு முயன்றவா்; குடும்பத் தகராறில் பைக்கில் நாலாட்டின்புதூா் பெத்தேல் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா் எனத் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடக்கிறது.