விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்
ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா்.
சியோஜ் தாா் பகுதியின் எல்லையையொட்டி துடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்து ராணுவ வீரா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் நீடித்து வருவதாக ஜம்மு காவல் துறை ஐஜி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.