நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்
திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
திருப்பட்டினம் ஐடிஐ வளாகத்தினுள் அமைந்துள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய குடிநீா் குழாய் இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், 20-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் மற்றும் மாலை நேரத்தில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
இதன் மூலம் முஸ்லிம் தெரு, மேலையூா், அரிசிக்காரத் தெரு, வீரபாண்டி நகா், சட்டையாப்பிள்ளைத் தெரு, மாா்க்கெட் தெரு, பண்டகசாலை, போலகம், வெங்கடேசப் பெருமாள் வடக்கு மற்றும் தெற்குத் தெரு, காமன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, வடம்போக்கித் தெரு, ராமசாமி கோயில் தெரு, பங்களாத்தோட்டம், கே.பி.எம். தோட்டம் பகுதிக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.
பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.