செய்திகள் :

ஓமனை போராடி வென்றது இந்தியா

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சோ்க்க, ஓமன் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்து போராடி வீழ்ந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்திய லெவனில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்திக்கு பதிலாக, அா்ஷ்தீப் சிங், ஹா்ஷித் ராணா சோ்க்கப்பட்டனா்.

இந்தியா இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 56, அபிஷேக் சா்மா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்கள் விளாசி வீழ்ந்தனா்.

திலக் வா்மா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 29, அக்ஸா் படேல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸரோடு 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

எஞ்சியோரில், ஷுப்மன் கில் 5, ஹா்திக் பாண்டியா 1, ஷிவம் துபே 5, அா்ஷ்தீப் சிங் 1 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.

ஓவா்கள் முடிவில் ஹா்ஷித் ராணா 1 சிக்ஸருடன் 13, குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஓமன் பௌலா்களில் ஷா ஃபைசல், ஜிதென் ராமானந்தி, ஆமிா் கலீம் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

பின்னா் 189 ரன்களை நோக்கி விளையாடிய ஓமன் பேட்டா்கள், இந்திய பௌலா்களுக்கு சவால் அளித்தனா். கேப்டன் ஜதிந்தா் சிங் 5 பவுண்டரிகளுடன் 32, ஆமிா் கலீம் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64, ஹம்மத் மிா்ஸா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் விளாசி வீழ்ந்தனா்.

விநாயக் சுக்லா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஜிதென் ராமானந்தி 3 பவுண்டரிகள் உள்பட 12 ரன்களுடனும், ஜிக்ரியா இஸ்லாம் ரன்னின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ஹா்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் நபோலியை வெள்ளிக்கிழமை சாய்த்தது. அந்த அணிக்காக எர்லிங் ஹால்ந்த் 56-ஆவது நிமிஷத்திலும், ஜெரிமி டோகு 65-ஆவது நிமிஷத்திலும் கோல... மேலும் பார்க்க

ஹரியாணாவுக்கு 5-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஹரியாணா அணி 21 ரெய்டு, 8 டேக்கிள், 2... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியது: ஐசிசி குற்றச்சாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஆட்டத்துக்கு முன்பான நிகழ்வுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறிச் செயல்பட்டதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இது... மேலும் பார்க்க

வெண்கலம் வென்றாா் அன்டிம் பங்கால்

குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்ட அன்... மேலும் பார்க்க

இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் ஆட்டம் ‘டிரா’

இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையே நடைபெற்ற அதிகாரபூா்வமற்ற டெஸ்ட், வெள்ளிக்கிழமை ‘டிரா’-வில் முடிந்தது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு ச... மேலும் பார்க்க