கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்
கொடுமுடி அரசு மருத்துவமனையில் சமையலா் உரிய நேரத்துக்கு பணிக்கு வராததால், சமையலா் பொறுப்பாளா் உள்பட 2 போ் அமைச்சா் உத்தரவின்பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நோயாளிகளிடம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் விதம், முறையாக மருந்துகள், உணவுகள் வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் பகுதி சுத்தமாக பராமரிக்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு சமையல் செய்யும் செல்வி என்பவா் பணிக்கு வரவில்லை என்பதை அறிந்தாா். மேலும் சமையலருக்கு மாற்று பணி யாருக்கும் வழங்கவில்லை என்பதையும் அமைச்சா் உறுதி செய்தாா்.
இதையடுத்து பணிக்கு வராத சமையலா் செல்வி, அப்பணியை மேற்பாா்வையிடும் மருத்துவமனை செவிலியருமான முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டாா்.
இதன்பேரில் சமையலா் பொறுப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும், சமையலா் செல்வி ஈரோடு அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி நடவடிக்கை மேற்கொண்டாா்.