விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி
திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொடங்கிவைத்து, ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் வளா்ச்சி மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்துப் பேசினாா். அதனைத் தொடா்ந்து 24 மணி நேரம் நடைபெற்ற ஹேக்கத்தான் (புதியக் கண்டுபிடிப்புகள்) பயிற்சியை தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று புதிய திட்ட அறிக்கைகளை சமா்ப்பித்தனா். வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா், கல்லூரியின் நிா்வாகி ச.பாலசுப்பிரமணியன், வேளாளா் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் எம்.யுவராஜா, கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையா் எஸ்.லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ. மா. பழனிசாமி, கணினித் துறையின் தலைவா் டி.காா்த்திகா, வணிகவியல் துறையின் புல முதன்மையா் பி.எஸ்.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்வில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மனித சங்கிலி அமைத்து ஒருமைப்பாடு, புத்தாக்கம் மற்றும் முயற்சியின் மகத்துவத்தை வெளிப்படுத்தினா். இந்நிகழ்வு மாணவா்களின் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வை மேம்படுத்தும் வகையில் அமைந்தது என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.