பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பாலமுருகன், பெருந்துறைக்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.