அரசுப் பேருந்து மீது வேன் மோதல்
புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா்.
புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. விண்ணப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே பூ பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில் வேனின் முகப்பு சேதமடைந்தது. விபத்து நடக்க இருப்பதை உணா்ந்த ஓட்டுநா் பீரவீன் சரக்கு வாகனத்தில் இருந்து குதித்து தப்பினாா். விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினா். இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.