செய்திகள் :

Ray-Ban Meta: இனி மொபைலே தேவையில்லை; அனைத்துக்குமான AI கண்ணாடி - என்ன விலை?

post image

மெட்டா நிறுவனம் கடந்த புதன் (செப் 17) அன்று புதிதாக இரண்டு ரே-பான் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வலது லென்ஸில் செயலிகள், செய்திகள், அறிவிப்புகள், திசைகளைக் காட்டும் வகையில் திரை (டிஸ்ப்ளே) அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணாடியின் கட்டுப்பாட்டு மையமாக மணிக்கட்டுப் பட்டை செயல்படும். Meta Neural Band என அழைக்கப்படும் இந்தப் பட்டை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அணிந்துகொண்டு கையால் சில சைகைகளைச் செய்வதன் மூலம் கண்ணாடியைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த பேண்ட் தண்ணீரால் பாதிக்கப்படாத வண்ணம், ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு சாதனத்தை கையாள்வது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்கின்றனர்.

மெட்டாவின் வருடாந்திர நிகழ்வான மெட்டா கனெக்ட் 2025-ல் மார்க் சக்கர்பெர்க் இந்தக் கண்ணாடியை அறிமுகப்படுத்தும்போது, மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே Meta Ray-Ban Display என அழைத்தார்.

இந்தக் கண்ணாடியை அணிந்திருக்கும்போது மொபைலை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்கின்றனர். கால் பேசுவது, புகைப்படம் எடுப்பதைக் கடந்து, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஆப்களை இதில் பயன்படுத்த முடியும். புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்க முடியும். இதில் மெட்டா ஏஐ அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது.

Meta Ray-Ban Glass

இந்தக் கண்ணாடிகளை அணியும்போது நிஜ வாழ்க்கையில் பங்கெடுக்கும்போதே, டிஜிட்டல் தகவல்களை அறிந்திருக்க முடியும்.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்தக் கண்ணாடியை வாங்க முடியும். இதன் விலை 799 அமெரிக்க டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 70,402 ரூபாய். முதல் கட்டமாக அமெரிக்க சந்தையில் மட்டுமே இது விற்பனைக்கு வருகிறது.

இந்தக் கண்ணாடி மெட்டா மென்பொருள் தளத்தில் இயங்கும். ஆப்பிள் போல ஸ்மார்ட்ஃபோன் இல்லாமலே மெட்டா ஈகோ சிஸ்டத்துக்குள் வாடிக்கையாளர்களைக் கொண்டுவரும் முயற்சியாக மெட்டா இதனைச் செய்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Google Gemini: "மச்சத்தைக் கூட எப்படி நோட் பண்ணுச்சு?" - Nano Banana AI போட்டோக்களின் அபாயம்|உஷார்

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, போஸ்ட், ஃபேஸ்புக் போஸ்ட், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் இப்போது கூகுள் ஜெமினியின் நேனோ பனானா ஏ.ஐ போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன.இளம்பெண்களும், இளைஞர்களும் ஃ... மேலும் பார்க்க

AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?

ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு. இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் 'சூரியன்' என... மேலும் பார்க்க

Larry Ellison: உலகின் No.1 பணக்காரர்; 81 வயதில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய லேரி எல்லிசன் யார்?

உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்திருக்கிறார் ‘Oracle’ நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன்.2021- ஆம் ஆண்டில் இருந்து டெஸ்லா, ஸ்பேஸ் எ... மேலும் பார்க்க

iPhone Air: ஆப்பிளின் மெல்லிய ஐபோன் வெர்ஷன்; வடிவமைத்த அபிதுர் சவுத்ரி பற்றி தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப திருவிழாவான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது. iPhone Airவழக்கமான ஏர்பட்ஸ், ஆப்பிள் வாட்... மேலும் பார்க்க

Apple Event: ஆப்பிளின் புதிய 17 சீரிஸ் எப்படி இருக்கிறது? விலை என்ன? விவரங்கள் இதோ!

ஆப்பிளின் செப்டம்பர் மாத ஈவண்ட் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆப்பிள் பெரிதாக அப்டேட் கொண்டுவரும் என்று எதிர்பார்த்து ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். இம்முறையாவது புதிய பெரிய... மேலும் பார்க்க

AI வளர்ச்சி: ``சிலருக்கு செல்வம், பலருக்கு வறுமை'' - எச்சரிக்கை விடுத்த ஜெஃப்ரி ஹின்டன்

தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பல்வேறு துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது. அதே நேரத்தில், மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து விடும் என்ற அச்சக் குரல்களும... மேலும் பார்க்க