செய்திகள் :

Vijay TVK: பல்வேறு நிபந்தனைகளுடன் நாகை, திருவாரூரில் இன்று விஜய் பரப்புரை!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார். காலை 10 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் விஜய்.

Vijay TVK - விஜய் த.வெ.க

விஜய்யின் பரப்புரைக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. தவெக தலைவரின் பரப்புரை 11 மணி அளவில் தொடங்கும், 30 நிமிடங்களுக்குள் உரை முடிக்கத் திட்டம், வாகனங்களை அனுமதி இல்லாமல் பின்தொடரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது எனவும் பரப்புரைக் கூட்டத்திற்கு வருவோர் கையில் கம்பு உள்ளிட்ட எந்த ஆயுதங்களும் வைத்திருக்கக் கூடாது எனவும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

vijay

பரப்புரை மேற்கொள்ளப்படும் இடத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதால் பரப்புரை நேரத்தில் மின்நிறுத்தம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகையைத் தொடர்ந்து திருவாரூரிலும் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அங்கு பரப்புரை பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

``அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வர... மேலும் பார்க்க

PMK: "தேர்தல் ஆணையக் கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை; பாலு சொன்னது பொய்" - கொதிக்கும் எம்எல்ஏ அருள்

அன்புமணி தலைமையிலான பா.ம.க-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பொய்யான தகவலைக் கூறியுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த கடிதத்தில் மாநில... மேலும் பார்க்க

``புதிய கட்சிகளை அடக்க நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதிகமாகும்; குறையாது'' - டாக்டர் கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற 24-ம் தேதி இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் க... மேலும் பார்க்க

TVK: ``ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற; அறுந்துபோன ரீல்ஸ் என்னென்ன தெரியுமா?'' - அரியலூரில் பேசிய விஜய்

அரியலூரில் விஜய் பரப்புரைதிருச்சியில் தனது பரப்புரையை முடித்துவிட்டு அரியலூர் சென்று பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். அந்தப் பரப்புரையில் விஜய் பேசியதாவது, "இங்கு என்னைப் பார்க்க வந்திருக்கின... மேலும் பார்க்க

TVK Vijay: ``எல்லோருக்கும் வணக்கம்!'' - திருச்சியில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய்நா வரேன்” என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மர... மேலும் பார்க்க

``என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' - ராமராஜன் சொல்லும் காரணம்

ராமராஜன் தலைமை நற்பணி மன்றம்திரைப்பட நடிகரும் முன்னாள் அதிமுக திருச்செந்தூர் மக்களவை உறுப்பினருமான ராமராஜன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமராஜன் தலைமை நற்பணி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்... மேலும் பார்க்க