ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!
சென்னை மெட்ரோ ரயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
சென்னை: சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையில், க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சனிக்கிழமை காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே, மெட்ரோ ரயில் பயணிகள் மெட்ரோ செயலி, வாட்ஸ்ஆப், சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.