செய்திகள் :

Doctor Vikatan: நடிகர் ரோபோ சங்கரை பாதித்த மஞ்சள் காமாலை பயங்கர நோயா? - தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: மஞ்சள் காமாலை தீவிரமாகி, நடிகர் ரோபோ சங்கர் இறந்திருக்கிறார். மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழக்கும் நபர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது அவ்வளவு பயங்கர நோயா... வராமல் தடுக்க, வந்த பின் குணப்படுத்த என்ன வழி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நோய்களில் எதுவும் சாதாரணமானதோ, பயங்கரமானதோ கிடையாது. சாதாரண இருமல், சளி, காய்ச்சல்கூட மிகத் தீவிரமான நோயாக மாறலாம்.

மிகத் தீவிரமான நோய்கள், சில சமயங்களில் சாதாரணமாக கடந்து போகலாம். இரண்டுமே நம் உடலியக்கம் சார்ந்தவை.

நடிகர் ரோபோ சங்கர், தனக்கு மஞ்சள் காமாலை பாதித்தது குறித்து பல இடங்களில் பேசியிருக்கிறார். மஞ்சள் காமாலையை ஆங்கிலத்தில் 'ஹெப்படைட்டிஸ்' ( Hepatitis) என்று சொல்வோம்.

வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் இந்த பாதிப்பில், ஹெப்படைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெப்படைட்டிஸ் ஏ பாதிப்புதான், பரவலாக காணப்பட்டது. அதுதான் நாம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய மஞ்சள் காமாலை பாதிப்பு. 

இது குடிநீர் சுத்தமாக இல்லாததால் பாதிக்கக்கூடியது. உடல் மெலிவது, வாந்தி வருவது, பசியின்மை, கண்களும் நகங்களும் மஞ்சளாக மாறுவது போன்ற அறிகுறிகளைக் காட்டும்.  இந்த வகை பாதிப்புக்கு இன்று தடுப்பூசி வந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் அதைத் தவறாமல் போட்டுக்கொள்கிறார்கள்.

உடல் மெலிவது, வாந்தி வருவது, பசியின்மை, கண்களும் நகங்களும் மஞ்சளாக மாறுவது போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

ஹெப்படைட்டிஸின் மற்ற பிரிவுகள் ரத்தம் மூலம் பரவக்கூடியவை. உதாரணத்துக்கு, ஹெப்படைட்டிஸ் பி பாதித்த ஒருவருக்குப் பயன்படுத்திய அதே ஊசியை இன்னொருவருக்கும் பயன்படுத்தும்போது அவருக்கும் அந்த நோய் பரவும்.

இந்த பாதிப்புக்கும் தடுப்பூசி இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் எல்லோருக்கும் இந்தத் தடுப்பூசியும் போடப்படுகிறது. அதேபோல மருத்துவத் துறையில் முன்களப் பணியாளர்களாக வேலை செய்வோருக்கும் இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் சி, டி, இ போன்றவை பாதித்தால், குணப்படுத்துவது மிகமிக சிரமம். இவற்றுக்கான மருந்துகளும் குறைவு. இவற்றை எல்லாம் தாண்டி, இன்னொரு வகை பாதிப்பும் உண்டு.

அது 'ஆல்கஹாலிக் ஹெப்படைட்டிஸ்' (Alcoholic hepatitis) எனப்படும். குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு வரக்கூடிய பிரச்னை இது.

குடிப்பழக்கம் அதிகரித்து வருவதால், இந்த பாதிப்பும் இன்று பலரையும் பாதிப்பதைப் பார்க்கிறோம்.  அதனால் ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ் (Alcoholic liver disease) எனப்படும் இந்த பாதிப்பும் இப்போது பரவலாகி வருகிறது. இது தீவிரமானால், நாளடைவில் 'சிரோசிஸ்' (Cirrhosis) எனப்படும் கல்லீரல் சுருக்க நோயை ஏற்படுத்தலாம். 

குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு வரக்கூடிய பிரச்னை இது.

இந்த பாதிப்பு வந்துவிட்டால், ரிவர்ஸ் செய்யவே முடியாது. சிரோசிஸ் பாதித்தால், கல்லீரல் தொடர்பான பிற பாதிப்புகளும் தாக்கலாம். உதாரணத்துக்கு, Hepatitis encephalopathy என்ற பாதிப்பு வரலாம்.

இதில் மூளையின் செயல்பாடுகள் குறையும். வலிப்பு வரலாம். மல்ட்டி ஆர்கன் ஃபெயிலியர் எனப்படும் உடலின் பிற உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். அதேபோல, சிரோசிஸ் பாதித்தவர்களுக்கு hepatocellular carcinoma எனப்படும் கல்லீரல் புற்றுநோய் தாக்கும் ரிஸ்க்கும் உண்டு.

எனவே, சாதாரண மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் வரை கொண்டு போகலாம். அடுத்தது கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பாதிப்பு.

இது நாளடைவில், 'நாஷ்' (Non-alcoholic steatohepatitis -NASH) பிரச்னையை ஏற்படுத்தலாம். நீரிழிவு உள்ளோர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர், உணவுப்பழக்கம் முறையற்று இருப்போர் போன்றோருக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு வரலாம்.

ஃபேட்டி லிவர், நாளடைவில், நாஷ் பாதிப்பாக மாறும். அது சிரோசிஸ் அல்லது புற்றுநோய் பாதிப்புகளில் கொண்டுவிடலாம்  என ஆய்வுகள் சொல்கின்றன.

கல்லீரல் பாதிப்பு

எனவே, மஞ்சள் காமாலை வந்தால் பச்சிலை வைத்தியம் செய்வது, மூலிகை ஜூஸ் குடிப்பது  போன்றவை உதவாது. மஞ்சள் காமாலை என்பது பல பிரிவுகளை உள்ளடக்கியது.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். அது எந்த வகை பாதிப்பு என்பதை முறையான மருத்துவரிடம் ஆலோசித்து, சரியான சிகிச்சையை எடுப்பதுதான் பாதுகாப்பானது. அலட்சியம் காட்டினால், ஆபத்து என்பதை கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vitamin Tale: நம்ம உடம்புக்குள்ள இருக்கிற ஓர் இளவரசியோட கதை இது!

எத்தனையோ கதைகளைப் படிச்சிருப்பீங்க. ஒரு வைட்டமினோட கதையைப் படிச்சிருக்கீங்களா..? இன்னிக்கு ஒரு வைட்டமினோட கதையை சொல்லப் போறோம். அதுவோர் அழகான பிங்க் நிற இளவரசி. இந்தக் கதையை சொன்னவர் சென்னையைச் சேர்ந்... மேலும் பார்க்க

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளு... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலை : எதனால் ஏற்படுகிறது, குணப்படுத்துவது எப்படி? - விரிவான தகவல்கள்

கல்லீரல்... மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமா... மேலும் பார்க்க

தினமும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

`ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?

Doctor Vikatan:ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, எந்த மாதிரி பயிற்சிகள் செய்வோர் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும்?யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்,வே புரோட்டீன் என்பத... மேலும் பார்க்க

மன அழுத்தம் வந்தால் பற்களைக் கடிக்கிறீர்களா? இதை படிங்க!

மன அழுத்தத்தால் உடல் நலமும் பாதிப்படையும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பற்களும் பாதிப்படையும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஹேமா மாலதி. ''கோபத்தில் இருக்கும்போது நம்மை அறியாமல் நம... மேலும் பார்க்க