காலை உணவு : தவிர்ப்பது தவறா? பசியே இல்லாவிட்டாலும் அவசியம் சாப்பிடத்தான் வேண்டு...
Trump: ``சீன அதிபருடன் போன்கால்; நான் சீனா செல்கிறேன், ஜி அமெரிக்கா வருவார்'' - ட்ரம்ப் சொல்வதென்ன?
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.
ட்ரம்ப் பதிவு
இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சீன அதிபர் ஜி உடன் பயனுள்ள போன்காலைப் பேசி முடித்திருக்கிறேன்.
வர்த்தகம், ஃபென்டனில், ரஷ்யா, உக்ரைன் போர் முடிவு, டிக்டாக் ஒப்பந்தத்தின் அனுமதி உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.
தென்கொரியாவில் நடக்க உள்ள APEC உச்சி மாநாட்டில் அதிபர் ஜியை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நான் சீனா செல்ல உள்ளேன். அதே மாதிரி, அதிபர் ஜியும் உரிய நேரத்தில் அமெரிக்கா வருவார். போன்கால் மிக நன்றாகச் சென்றது.
நாங்கள் மீண்டும் போன்காலில் உரையாடுவோம். டிக்டாக் ஒப்புதலுக்கு நன்றி, நாங்கள் இருவரும் APEC உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொள்ள ஆவலாக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஜின்பிங் என்ன பேசினார்?
சீன அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் சின்ஹுவா தகவலின்படி, சீன அதிபர் ஜின்பிங் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவு குறித்து வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அமெரிக்கா ஒருதலைப்பட்ச வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பேசினார் என்று கூறப்படுகிறது.
டிக்டாக் வர்த்தக ஒப்பந்தத்தில் என்னென்ன முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
