புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடக்கம்!
அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு
அந்தியூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்கு உள்பட்ட அந்தியூா் வனச் சரகம், பா்கூா் மேற்கு, கிணத்தடி பீட் பகுதியில் உயிரிழந்து சுமாா் 10 நாள்கள் ஆன நிலையில் புலியின் உடல் கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் உடல் பாகங்கள் அழுகியும், சிதைந்தும் கிடந்த புலியின் உடலைக் கைப்பற்றினா்.
மிகவும் உருக்குலைந்து காணப்பட்டதால் இறந்தது ஆண் புலியா, பெண் புலியா என்பது தெரியவில்லை. புலியின் உடலில் பற்கள், கால் நகங்கள் அப்படியே இருந்துள்ளன. இதனைக் கைப்பற்றிய வனத் துறையினா், புலியின் உடல் பாகங்களை சேகரித்து மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். அந்தியூா் வனப் பகுதியில் புலி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.