சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிக் கொண்டு தாளவாடி செல்வதற்காக சத்தியமங்கலம்- கோவை சாலையில் லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தா்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் என்பவா் லாரியை ஓட்டி வந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள செண்பகபுதூா் வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் விபத்தில் சிக்கிய ஓட்டுநா் வடிவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தில் காயமடைந்த வடிவேலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.