செய்திகள் :

பாடகர் ஸுபீன் கார்க் மரணம்: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்!

post image

பிரபல அசாமீஸ் பாடகர் ஸுபீன் கார்கின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அசாமீஸ், ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.

மூச்சுத் திணறலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, இன்று (செப்.19) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் ஸுபீன் கார்கின், திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திய் ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில், பாடகர் ஸுபீன் கார்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தளப் பதிவு:

“பாடகர் ஸுபீன் கார்கின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவர் இசைத்துறைக்கு ஆற்றிய பணியால் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார்.

அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவு:

”ஸுபீன் கார்கின் மறைவு ஒரு துயரச் சம்பவம். அவரது குரல் ஒரு தலைமுறையை வரையறுத்தது மற்றும் அவரது திறமை உண்மையில் நிகரற்றது.

அசாமீஸ் இசையின் நிலப்பரப்புக்கு மறுவடிவம் கொடுக்க அவர் தனது சொந்த துயரங்களை வென்று வந்தார். அவரது விடாமுயற்சியும் தைரியமும் ஒரு நீடித்த அடையாளத்தை விட்டு சென்றுள்ளது. அவர் என்றுமே நமது இதயங்களிலும் எண்ணங்களிலும் வாழ்ந்திருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஸுபீன் கார்க், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பு ஏற்பாடு!

Prime Minister Narendra Modi and Lok Sabha Opposition Leader Rahul Gandhi have expressed their condolences on the demise of famous Assamese singer Zubeen Garg.

தனுஷ் குரலில்... ரெட்ட தல முதல் பாடல்!

ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ரெட்ட தல திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆக்சன் திரில்லர் பட... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இரங்கல் தெரிவித்துள்ளார்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உடல்நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்த தமிழக வீரர்!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழக வீரர் ஒருவர் இணைந்துள்ளார்.புரோ கபடி லீக் தொடரின் 12-வது சீசன் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷின் தீயவர் குலை நடுங்க டீசர்!

தீயவர் குலைநடுங்க திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தீயவர் குலை நடுங்க. கிரைம் திரில்லர் படமாக உருவாகியிர... மேலும் பார்க்க

வலுவாக மீண்டு வருவேன்; உலக தடகள சாம்பியன்ஷிப்பிலிருந்து வெளியேறிய பிறகு நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பின்ஷிப்பிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் வலுவாக மீண்டு வருவேன் என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிரான பராசக்தி... சக்தித் திருமகன் - திரை விமர்சனம்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறையில் பிறக்கும் கிட்டு (விஜய் ஆண்டனி) என்கிற ஒரு ஆள், இந்திய அரசே திரும்பிப் பார்க்கும் விஷயத்தைச் ... மேலும் பார்க்க