நாகையில் தமிழக வெற்றிக் கழகம் விஜய் : 7 தகவல்கள்

நாகப்பட்டினம் புறக்கணிப்பு – மீன் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தாலும், தொழிற்சாலைகள், குடிநீர், வீடு, மெரைன் கல்லூரி போன்ற அடிப்படை தேவைகளை அரசு வழங்கவில்லை என குற்றச்சாட்டு.

மீனவர்களின் உரிமைக்குரல் – இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களுக்காக குரல் கொடுப்பது குற்றமல்ல; அது எங்கள் கடமை.

பாஜக பாசிசம் குற்றச்சாட்டு – இந்திய மீனவர்கள் vs. தமிழக மீனவர்கள் என்று பிரித்து பேசுவது பாஜகவின் பாசிச அரசியல்; அதற்கு எதிராகவே நாங்கள் என விமர்சனம்.
திமுக மீது தாக்குதல் – “குடும்ப ஆட்சி, சுயநலம், மக்கள் நலம் புறக்கணிப்பு” என்று திமுக அரசை நேரடியாக குற்றம் சாட்டினார்.
முதலீட்டு சவால் – “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்ற கேள்வியால், அரசின் முதலீட்டு திட்டங்களின் உண்மைத்தன்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்கினார்.
சனிக்கிழமை மக்கள் சந்திப்பு விளக்கம் – மக்களுக்கு தொந்தரவு இல்லாமல், வார இறுதி நாளில் மட்டுமே சந்திக்க திட்டமிட்டதாகவும், அரசியலில் ஓய்வு பெற வேண்டியவர்களுக்கு ஓய்வு தர இருப்பதாக கூறினார்.

அரசின் தடைகள் – மின்தடை, ஸ்பீக்கர் வயர் வெட்டுதல் போன்ற தடைகள் மக்கள் சந்திப்புக்கு அரசால் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு; “RSS தலைவர் வந்தால் இப்படி செய்வீர்களா?” என்று நேரடி சவால்.