செய்திகள் :

israel palestine war: 'குண்டுமழை பொழியும் இஸ்ரேல்' - உயிர் பிழைக்க போராடும் மக்கள்; கண்ணீரில் காஸா!

post image

போர் வெடித்ததற்கான பின்னணி!

இரண்டாம் உலகப் போரின்போது சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கு பாதுகாப்பான இடம் தேவை என்ற எண்ணம் தோன்றியது. முதல் உலகப் போருக்குப் பிறகு, பாலஸ்தீனப் பகுதி பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்தது. இதனால், 1917-ல் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃபர், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தேசிய இல்லம் அமைக்க ஆதரவு தெரிவித்தார். அதற்காக பால்ஃபர் பிரகடனத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பல யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1947-ல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை யூத நாடு, அரபு நாடு என இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை முன்மொழிந்தது.

இஸ்ரேல், காஸா போர்

இதை யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர், ஆனால் அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இத்திட்டம் நிறைவேறாத நிலையில், மே 1948-ல் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. அதைத் தொடர்ந்து, யூதத் தலைவர்கள் இஸ்ரேலை சுதந்திர நாடாக அறிவித்தனர். இதனால், பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களை இழந்ததாக உணர்ந்தனர். 1967-ல் நடந்த ஆறு நாள் போரில், இஸ்ரேல் காசா பகுதி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்தது. இப்பகுதிகளில் இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறி யூதக் குடியேற்றங்களை அமைத்தது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக, இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இஸ்ரேல், காஸா போர்

காஸாவில் ஹமாஸின் எழுச்சி!

இதற்கிடையில் 2007-ல் காஸாவில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தது ஹமாஸ் இஸ்லாமியப் போராளி அமைப்பு. அவர்களின் நோக்கம் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பது, இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பது போன்றவையாகும். ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, காஸா மீது கடுமையான பொருளாதார தடைகளை இஸ்ரேல் விதித்தது. இதன் காரணமாக காஸாவில் வறுமை, வேலையின்மை போன்ற பிரச்னைகள் வெடித்தது. இதனால் இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமானது. கடந்த 2023-ல் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் நாடு கடத்திச் செல்லப்பட்டனர்.

இஸ்ரேல், காஸா போர்

இந்தத் தாக்குதல் தான் தற்போதைய போருக்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தது. இதையடுத்து ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அப்போது, 'ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படும். கடத்தப்பட்ட பணயக்கைதிகள் மீட்கப்படுவார்கள்' என இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் காஸா நகரின் பெரும்பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில், "இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 2023 முதல், 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,65,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காஸா போர்

'காஸாவில் இனப்படுகொலை: ஐ.நா'

மறுபுறம் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஐ.நா.வின் சுயாதீன விசாரணை ஆணையம், 'காஸாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதற்கான சான்றுகள் இருக்கிறது' எனக்கூறி பகீர் கிளப்பியிருக்கிறது. மறுபுறம் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் கடுமையாக நிராகரித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது உரைகளில், 'இந்த போர் வெற்றி பெறும் வரை தொடரும். இது இஸ்ரேலின் இருப்புக்கான போர். ஹமாஸை முழுமையாக அழிப்பது மட்டுமே இஸ்ரேலுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கும். காஸாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும்' எனக்கூறி வருகிறார்.

இஸ்ரேல், காஸா போர்

காஸாவின் கடற்கரை ஒட்டிச் செல்லும் ஒரு முக்கிய சாலையான அல்-ரஷீத் சாலை சில மாதங்களாக மக்கள் வெளியேறுவதற்காகத் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும்பாலும் இந்த வழியாகவே தெற்கு நோக்கிச் செல்கிறார்கள். சலாஹ் அல்-டின் சாலை காஸாவின் மத்தியப் பகுதி வழியாகச் செல்லும் மற்றொரு முக்கிய வடக்கு-தெற்கு வழித்தடம். சமீபத்தில் இஸ்ரேலிய ராணுவம் இந்த வழியையும் குறுகிய காலத்திற்குத் திறந்து, பின்னர் மூடிவிட்டது. இது ஒரு தற்காலிக வழியாகவே செயல்படுகிறது.

புதிய மனிதாபிமான பேரழிவு!

மக்கள் பெரும்பாலும் கால்நடையாகவே வெளியேறுகிறார்கள். சிலர் தங்கள் குடும்பங்களை தள்ளுவண்டிகள், கழுதை வண்டிகள் மூலம் கொண்டு செல்கிறார்கள். வெளியேறும் மக்கள் போர்வைகள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு பயணம் செய்கிறார்கள். வெளியேறும் வழிகள் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டாலும், அந்த வழிகளும் பாதுகாப்பற்றவையாகவே. அதற்கு மக்கள் செல்லும் வழியிலும் தாக்குதல்கள் நடந்ததாகக் ஐ.நா கூறுகிறது. சில சமயங்களில் இஸ்ரேலிய ராணுவம் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இஸ்ரேல், காஸா போர்

காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள், ஏற்கனவே நெரிசலான தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் தெற்குப் பகுதியிலும் உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் மிகக் குறைவாக உள்ளன. இந்த நெருக்கடி ஒரு புதிய மனிதாபிமான பேரழிவை உருவாக்கியுள்ளது. வெளியேறுவதற்கான வாகனங்களை வாடகைக்கு எடுப்பது மிகவும் அதிக செலவு கொண்டது. பல குடும்பங்களால் இதைச் செய்ய முடியாமல், நடந்தே செல்ல வேண்டியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களால் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றன. இதனால், வெளியேற்றத்திற்கான வழிகள், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த தகவல்கள் மக்களுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை.

'ஒரு பாக்கெட் பிஸ்கட் ரூ.2,400; ஒரு கிலோ சர்க்கரை ரூ.4,914..'

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அனுமதி அளித்தாலும், வெளியேறும் செயல்முறை மிகவும் அபாயகரமானதாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இதையடுத்து பல சர்வதேச அமைப்புகளும், ஐ.நா.வும் பஞ்சம் நிலவுவதாக அறிவித்துள்ளன. இது ஒரு சாதாரண தட்டுப்பாடு அல்ல, மாறாக, மிகப் பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாக பார்க்கப்படுகிறது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 2.3 மில்லியன் மக்களும் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர். சுமார் 5 லட்சம் மக்கள் பஞ்சத்தின் தீவிரமான நிலையில் இருப்பதாக ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காஸா போர்

காஸாவில் நிலவும் கடுமையான உணவுப் பஞ்சம் மற்றும் கள்ளச் சந்தை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் ரூ.5 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட், காஸாவில் சுமார் ரூ.2,400 வரை விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ சர்க்கரையின் ரூ.4,914, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.4,177, ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.1,965, ஒரு கிலோ வெங்காயம் ரூ.4,423, ஒரு கப் காபியின் விலை சுமார் ரூ.1,800 வரை விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான முற்றுகை காரணமாக, மனிதாபிமான உதவிகள் மற்றும் வணிகப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வது மிகவும் குறைவுந்துள்ளது.

இரவில் நடக்கும் கொடூர தாக்குதல்!

இதையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்பட்டு, அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. சில சமயங்களில், மனிதாபிமான உதவியாக வரும் பொருட்களும் கள்ளச் சந்தைக்குச் சென்றுவிடுகின்றன என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விலைகள் அங்குள்ள பெரும்பாலான மக்களின் வாங்கும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதால் பலர் உணவு கிடைக்காமல் பட்டினியால் இறக்கும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் ஒரு வேளை உணவை மட்டுமே உண்கிறார்கள். மேலும், அந்த உணவும் பெரும்பாலும் ரொட்டி மற்றும் சிறிதளவு காய்கறிகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

இஸ்ரேல், காஸா போர்

உணவுக்குப் பதிலாக, கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் உணவு அல்லது வேறு சாப்பிடத் தகுதியற்ற பொருட்களைச் சாப்பிடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் நோய்த்தொற்றுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் காஸா நகருக்குள் படிப்படியாக நுழைந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. விமானப்படை, தரைப்படைகள் இரண்டும் காஸாவில் முன்னேறி செல்கிறது. இரவு நேரங்களில் இஸ்ரேலின் விமானங்கள், ஹெலிஹாப்டர்களில் இருந்து குண்டுமழை பொழிகிறது. இதில் கொஞ்சம், நஞ்சம் இருக்கும் மக்களும் உயிர் பிழைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். மொத்தத்தில் இந்த போர், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, புதிய மனிதாபிமான பேரழிவுகளை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேல், காஸா போர்

காஸாவில் நடக்கும் மோதல், வரலாற்று மற்றும் அரசியல் பின்னணியால் சிக்கலானது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீர்வு காணப்படாத வரை, பொதுமக்களின் துயரங்கள் தொடரும். சர்வதேச சமூகம் இந்த நெருக்கடிக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும், இல்லையெனில், இந்தப் போர் மேலும் பல உயிர்களைப் பறிக்கும்.

TVK திருவாரூர்: கலைஞர் தொகுதியில் விஜய்; நாகையிலிருந்து பின்தொடரும் தொண்டர்கள்!

நாகையிலிருந்து திருவாரூர் நோக்கி விஜய் பயணம்!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த வாரம் முதல் சனிக்கிழமை தோறும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட... மேலும் பார்க்க

TVK Vijay: `அடக்குமுறை, அராஜக அரசியல் எல்லாம் வேண்டாம் சார்’ - நாகையில் விஜய் காட்டம் | முழு உரை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்கிறார். தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை நாகையில் மேற்கொள்கிறார் விஜய்.அதில் விஜய் பேசியதாவது ”அண்ணா, பெரியார... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? | Vijay Full Speech

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று நாகப்பட்டினத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில்’ மக்களை சந்தித்தார்.அங்கு அவர் பேசியதின் முழுமையான எழுத்து வடிவம் இங்கே:விஜய், “அண்ணாவுக்கு வணக்கம்;பெரியா... மேலும் பார்க்க

GST குறைப்பு: ``நாடகமாடும் அவசியம் பிரதமர் மோடிக்கும், NDA அரசுக்கும் இல்லை" - நிர்மலா சீதாராமன்

மதுரையில் நடந்த தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசும்போது,"ஜிஎஸ்டி (GST) கொண்டு வரப்படுவதற்கு முன்பு ஒரு பொருளுக்கு வரி மாநிலத்திற்... மேலும் பார்க்க

``என் நெஞ்சில் நடந்து செல்லுங்கள்'' - முதல்வரைப் பார்க்க வழி கேட்ட மூதாட்டிக்கு சுரேஷ் கோபி பதில்

மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு முதன்முதலில் எம்.பி ஆனவர் நடிகர் சுரேஷ்கோபி. அவர் மத்திய இணை அமைச்சராக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சூரில் ... மேலும் பார்க்க

Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல கெடுபிடிகளை விதித்து வருகிறார்.இதையடுத்து, அவர் தற்போது 'தி ட்ரம்ப் கோல்டு கார்டு' விசா திட்டத்தை அறிமுகப்... மேலும் பார்க்க