செய்திகள் :

Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல கெடுபிடிகளை விதித்து வருகிறார்.

இதையடுத்து, அவர் தற்போது 'தி ட்ரம்ப் கோல்டு கார்டு' விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்ய விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சிறந்த வாய்ப்பு.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தனிநபர், கார்ப்பரேசன் என்ன செய்ய வேண்டும்?

இந்த விசாவைப் பெற விருப்பமுள்ள தனிநபர்கள் 1 மில்லியன் டாலர்களும், கார்ப்பரேஷன்கள் ஒரு நபருக்கு 2 மில்லியன் டாலர்களும் செலுத்த வேண்டும்.

இதற்கு செலுத்தப்படும் அனைத்து தொகையும் நேரடியாக அமெரிக்காவின் சிறப்பு கஜானாவிற்குச் சென்றுவிடும். இது அமெரிக்காவின் வர்த்தகத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த விண்ணப்பதாரர்கள் முன்னர் காட்டிலும் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசு கூறுகிறது.

ஏன் இந்தத் திட்டம்?

அமெரிக்காவில் லட்சக்கணக்கான சட்டத்திற்குப் புறம்பான மக்கள் குடியேறி உள்ளனர். இதைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்த மாதிரியான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் 90 நாட்களுக்கு இந்தக் கார்டிற்கான மொத்த நடைமுறைகளும் தெளிவுபடுத்தப்படும்.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ட்ரம்ப் தனது பதிவில், 'இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு மிக விரைவில் 100 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும். இது வரிக் குறைப்பிற்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும், நமது கடன்களை அடைக்கவும் உதவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

GST குறைப்பு: ``நாடகமாடும் அவசியம் பிரதமர் மோடிக்கும், NDA அரசுக்கும் இல்லை" - நிர்மலா சீதாராமன்

மதுரையில் நடந்த தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசும்போது,"ஜிஎஸ்டி (GST) கொண்டு வரப்படுவதற்கு முன்பு ஒரு பொருளுக்கு வரி மாநிலத்திற்... மேலும் பார்க்க

``என் நெஞ்சில் நடந்து செல்லுங்கள்'' - முதல்வரைப் பார்க்க வழி கேட்ட மூதாட்டிக்கு சுரேஷ் கோபி பதில்

மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு முதன்முதலில் எம்.பி ஆனவர் நடிகர் சுரேஷ்கோபி. அவர் மத்திய இணை அமைச்சராக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சூரில் ... மேலும் பார்க்க

ஆழ்கடல் ஆராய்ச்சி: ``வளம்பெற்ற பூம்புகார் பெருமையை வெளிக்கொணர்வோம்'' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

சங்க காலத்தில் தமிழர்களின் முக்கிய துறைமுகமாக இருந்த பூம்புகார் குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.அது குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு ... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேல் உறவில் விரிசல்; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் பேசினாரா ட்ரம்ப்? - என்ன நடந்தது?

கோபத்தில் உலக நாடுகள்!பாலஸ்தீனத்தின் மீதான தனது தாக்குதலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலால் மட்டுமல்லாமல், உணவு சென்றடையாமலும் பாலஸ்தீனத்தில் பலர் மடிகிறார்கள். இஸ்ரேல் பிரதமர் நெ... மேலும் பார்க்க

Trump: ``சீன அதிபருடன் போன்கால்; நான் சீனா செல்கிறேன், ஜி அமெரிக்கா வருவார்'' - ட்ரம்ப் சொல்வதென்ன?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். ட்ரம்ப் பதிவு இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சீன அதிபர் ஜி உடன் பயனுள்ள போன்காலைப் பேசி... மேலும் பார்க்க

Nepal: Gen Z போராட்டத்துக்குப் பிறகான முதல் அறிக்கை; இந்தியாவை இழுத்த ஒலி? - என்ன சொல்கிறார்..?

நேபாளம் நாட்டில் நடந்த ஜென் Z போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் அரசியலமைப்பு தினமான வெள்ளிக்கிழமை (செப் 19) முதன்முறையாக பொது அறிக்கையை வெளியிட்ட முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, அதில் இந்தியாவை... மேலும் பார்க்க