செய்திகள் :

காவிரி கடைமடையில் தவெக தலைவர் விஜய்! சற்று நேரத்தில் பிரசாரம்

post image

நாகை: தவெக தலைவர் விஜய், நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். காவிரி கடைமடைப் பகுதியில் விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற விருக்கிறார்.

விஜய் நாகையில் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதித்த நேரம் முடிந்துவிட்ட நிலையில், அண்ணா சிலை பகுதியை விஜய் வாகனம் தற்போதுதான் நெருங்கியிருக்கிறது. பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை அடைந்ததும், விஜய் பேசத் தொடங்குவார் என்பதால், அங்கு ஏராளமான தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

காலை முதலே இந்த இடத்தில் ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். மின் கம்பங்களின் மீது தொண்டர்கள் ஏறுவார்கள் என்பதால், தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் விஜய் பிரசாரம் நடக்கும் பகுதியில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுளள்து.

தவெக தலைவா் விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, அந்தக் கட்சி சாா்பில் தொண்டா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி தவெக தொண்டர்கள் மரங்களின் மீதும் கம்பங்களின் மீதும் நின்று விஜயை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து திருவாரூர் வரை காரில் வந்து, திருவாரூரிலிருந்து பிரசார வாகனத்தில் நாகை வந்தடைந்தார். அவருடன் ஏராளமான தொண்டர்களும் வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தனர். விஜய் வருகையால் நாகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த செப். 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கினாா். தொடா்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அதன்படி, இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், மரங்கள், மின்கம்பங்கள், கொடிக்கம்பங்கள், சாலைத் தடுப்புகளில் ஏறக் கூடாது என்று தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டும்கூட, அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை.

TVK leader Vijay is scheduled to campaign in Nagapattinam today. Vijay is scheduled to address the Cauvery Kadayamadai area shortly.

இதையும் படிக்க.. சென்னையில் போலி கால்சென்டர்கள்: 2 பெண்களை கைது செய்த புதுச்சேரி போலீஸ்!

சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், அந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், ம... மேலும் பார்க்க

ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு - விடியோ

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிர... மேலும் பார்க்க

மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.அவர் தொடர்ந்து பேசுகையில்,இலங்கைக... மேலும் பார்க்க

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அன்பில் மகேஸ்

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பி... மேலும் பார்க்க

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

நீலகிரி, ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் இன்று (செப்.20) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளில் வ... மேலும் பார்க்க