செய்திகள் :

சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

post image

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், அந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இன்று(சனிக்கிழமை) நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்,

"மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் நாகப்பட்டினம்தான். ஆனால் மீன்களை பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இங்கு இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள் அதிகம் இருக்கின்றன.

இந்த சாதனைகளுக்கு எல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அவர்கள் பேசி பேசி நம் காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆட்சி செய்தது போதாதா?

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருந்தேன். அது தவறா? மீனவர்களுக்காக நிற்பது நம் கடமை. நான் இப்போது அல்ல, முன்பிருந்தே மீனவர்களுக்காக பேசி வருகிறேன். 2011ல் நான் இங்கு வந்தேன்.

இலங்கைத் தமிழர்களுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அது நம்முடைய கடமை.

மீனவர்களுக்காக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு இல்லை. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் இல்லை. மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு தேவை.

நாகையில் மண் வளத்தைப் பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும்.

கடலோர கிராமங்களில் மண் அரிப்பைத் தடுக்கும் அலையாத்திக் காடுகள் அழிப்பைத் தடுக்க வேண்டும்.

சொந்த குடும்பத்தின் வளர்ச்சியில் சொந்த குடும்பத்தின் சுயநலத்தில் கவனம் செலுத்திய முதல்வர், இங்கு மக்களின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க காவிரி நீரை கொண்டு வந்தாரா?

பாரம்பரியமிக்க கடல் சார்ந்த இந்த ஊரில் ஒரு அரசு கடல்சார் கல்லூரி நிறுவலாம். மீன் சார்ந்த தொழிற்சாலை அமைத்தார்களா? வேலைவாய்ப்பைப் பெருக்கும் தொழில்வளத்தையாவது பெருக்கலாம், அதையாவது செய்தார்களா?

நாகை, கோடியக்கரை என இங்குள்ள சுற்றுலா நகரங்களை மேம்படுத்தலாம்.

உப்பு ஏற்றுமதிக்கு ஏதேனும் வழிவகை செய்து கொடுக்கலாம்.

நாகூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத நிலையே இருக்கிறது.

நாகை பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை. அதனை சரிசெய்வார்களா?

ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது..

ஏற்கெனவே இருந்த ரயில் தொழிற்சாலை மூடிவிட்டார்கள். அதனை மீண்டும் திறக்கச் செய்வார்களா?

மேலகோட்டை மேம்பாலம், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலை பணிகள் எப்போது முடியும்?

மழையால் இங்கு நெல் மூட்டை சேதம் அதிகம் ஏற்படுகிறது, அதற்கு தீர்வு ஏற்படுத்தித் தரலாம்" என்று பேசினார்.

TVK vijay listed the Nagapattinam issues

இதையும் படிக்க | வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

ரூ. 30,000 கோடி முதலீட்டால் 55,000 வேலைவாய்ப்புகள்: அமைச்சர் டிஆர்பி ராஜா

தூத்துக்குடியில் 55,000 வேலைவாய்ப்புகள் பெறப்படவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகை... மேலும் பார்க்க

நான் பேசுவதே 3 நிமிடம்தான்.. மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வார்களா? - விஜய்

மக்கள் சந்திப்பு பயணத்துக்கு திமுக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு ... மேலும் பார்க்க

ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு - விடியோ

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிர... மேலும் பார்க்க

மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.அவர் தொடர்ந்து பேசுகையில்,இலங்கைக... மேலும் பார்க்க

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அன்பில் மகேஸ்

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பி... மேலும் பார்க்க