செய்திகள் :

இந்தியா - பாக். போட்டிக்கு மீண்டும் நடுவராகும் பைகிராஃப்ட்; இந்த முறை சூர்யகுமார் கை குலுக்குவாரா?

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் மீண்டும் நடுவராக செயல்படவுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி அதன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் சுண்டப்படும்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் போட்டியின் நடுவரான ஆண்டி பைகிராஃப்டை நீக்கக் கோரி ஐசிசிக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை இரண்டு முறையும் ஐசிசி நிராகரித்துவிட்டது. மேலும், ஆண்டி பைகிராஃப்ட் போட்டியின் நடுவராக தொடர்வார் எனவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், நாளை (செப்டம்பர் 21) துபையில் நடைபெறும் போட்டியில் மீண்டும் மோதிக்கொள்ள உள்ளன. இந்தப் போட்டியின் நடுவராக ஆண்டி ஃபைகிராஃப்ட் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் நடுவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஐசிசி தனது முடிவில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று நடுவரை நீக்கினால் அது தவறான உதாரணமாக அமைந்துவிடும் என ஐசிசி கருதுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது மிகப் பெரிய பேசுபொருளான நிலையில், இரண்டு அணிகளும் மீண்டும் மோதிக்கொள்ள உள்ளன.

இந்த முறை சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவார்களா? அல்லது லீக் போட்டியில் நடந்ததே மீண்டும் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Andy Bycroft will once again be the umpire for the Super 4 match between India and Pakistan in the Asia Cup cricket.

இதையும் படிக்க: ஓமனுக்கு எதிராக பேட்டிங் செய்யாத சூர்யகுமார் யாதவ்; ஆதரவளிக்கும் முன்னாள் கேப்டன்!

உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம்: பாக். கேப்டன்

உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம் என பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செம்படம்பர் 30 ஆம்... மேலும் பார்க்க

ஓமனுக்கு எதிராக பேட்டிங் செய்யாத சூர்யகுமார் யாதவ்; ஆதரவளிக்கும் முன்னாள் கேப்டன்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யவில்லை.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்ற போட்... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சன் அரைசதம்: ஓமனுக்கு 189 ரன்கள் இலக்கு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 188 ரன்கள் குவித்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோது... மேலும் பார்க்க

எங்கள் பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார்; நினைவுகளைப் பகிர்ந்த ஷுப்மன் கில்!

எங்களது பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அவரது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.இந்திய மகளிரணி ஹர்மன்பிரீத் கௌர் கௌர் தலைமையில் ஐசிசி ஒருநா... மேலும் பார்க்க

ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஓம... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்

சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் ... மேலும் பார்க்க