செய்திகள் :

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்

post image

சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வாகியுள்ளன.

குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால், குரூப் பி பிரிவில் இந்திய அணி இன்று நடைபெறும் ஓமனுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது.

ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி ஓமனுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடரும். அதனடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை

  • இலங்கை vs வங்கதேசம் - துபை

  • இந்தியா vs பாகிஸ்தான் - துபை

  • பாகிஸ்தான் vs இலங்கை - அபுதாபி

  • இந்தியா vs வங்கதேசம் - துபை

  • பாகிஸ்தான் vs வங்கதேசம் - துபை

  • இந்தியா vs இலங்கை - துபை

(அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.)

ரவுண்ட் ராபின் முறை

சூப்பர் 4 சுற்றில் உள்ள அனைத்து அணிகளும் தங்களுக்கு ஒவ்வொரு ஆட்டத்தில் ரவுண்ட் ராபிம் முறையில் விளையாடுகின்றன. இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

லீக் சுற்று போலவே இந்தச் சுற்றிலும் வெற்றிபெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.

அட்டவணையில் இரு அணிகள் சரிசமமான நிலையில் இருந்தால் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.

Asia Cup Super 4s Schedule: Full list of fixtures, match dates, venues, timings

இதையும் படிக்க... நியூசிலாந்திடமிருந்து ஊக்கம் பெற்று இந்தியாவை வெல்வோம்: மே.இ.தீவுகள் பயிற்சியாளர்

நியூசிலாந்திடமிருந்து ஊக்கம் பெற்று இந்தியாவை வெல்வோம்: மே.இ.தீவுகள் பயிற்சியாளர்

இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.மேற்கிந்தியத் தீவ... மேலும் பார்க்க

5 சிக்ஸர்கள், தந்தை மறைவு... ஒரே நாளில் இலங்கை வீரருக்கு நேர்ந்த சோகம்!

ஆப்கானிஸ்தான் உடனான போட்டிக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (54 வயது) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், துபையில் இ... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசிய முகமது நபி..! 40 வயதிலும் அசத்தல்!

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ( 40 வயது) இலங்கை வீரர் துனித் வெல்லாலகே (22 வயது) ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். ஆட்டத்தை மாற்றிய முகமது நபியின் இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான 4 அணிகள்..! ஆப்கன் கண்ணீருடன் வெளியேற்றம்!

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வா... மேலும் பார்க்க

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நமீபியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குயி... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கா... மேலும் பார்க்க