செய்திகள் :

பண பரிவர்த்தனை : தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால், திரும்பப் பெறுவது எப்படி?

post image

இப்போதெல்லாம் ஆன் லைன் பேமென்ட் ஆப்களில் இருந்து பணம் அனுப்புவது அதிக மாகிவிட்டது. இப்படி பணம் அனுப்பும்போது சில நேரங்களில், தவறாக வேறொரு நபருக்கு பணம் அனுப்பி விடுவோம்; ஒரே நபருக்கே இரு முறை அனுப்பிவிடுவோம். இதுபோன்ற தவறுகள் நடந்துவிட்டால் என்ன செய்யலாம்..?

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில், ஒரு முறை வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகிவிட்டால், ஆகிவிட்டதுதான். அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடியாது. அதனால், தவறுதலாக யாருக்கேனும் பணம் அனுப்பிவிட்டீர்கள் என்று தெரிந்த உடனேயே, விரைவாகச் செயல்படுங்கள். இதுதான் இந்த மாதிரியான சூழல்களில், முதல் மற்றும் முக்கியமான ரூல். முதலில், நீங்கள் பணம் அனுப்பியவரிடம் பேசிப்பார்க்கலாம். உங்களது பணத்தை அவர் திருப்பி அனுப்ப மறுத்தால்... இல்லை திரும்ப பெற முடியாத வேறொரு சிக்கல் எழுந்தால், ஆன்லைன் பேமென்ட் ஆப்களிலேயே இது குறித்து முறையிடலாம்.

அடுத்ததாக, நீங்கள் தவறாக மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை, விளக்கமாக ஒரு கடிதமாக எழுதி, உங்களது வங்கியிடம் புகாராகக் கொடுக்கலாம். வங்கியின் மெயில் ஐ.டிக்கும் அனுப்பலாம். அப்போதும் பிரச்னை சரியாகவில்லை எனில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளிக்கலாம்.

என்.பி.சி.ஐ-ன் லேட்டஸ்ட் சட்டத்தின் படி, நீங்கள் யாருக்காவது தவறாகப் பணம் அனுப்பி விட்டால், அதைத் திரும்ப பெறும் ‘Payment Reversal Request’-ஐ ஒரு மாதத்துக்கு 10 முறை மட்டுமே செய்ய முடியும். அதுவும் ஒருவருக்கே திரும்பத் திரும்ப தவறாகப் பணம் அனுப்பப் பட்டிருந்தால், அவரிடம் இருந்து அதிக பட்சமாக 5 முறை மட்டுமே ரிவர்சல் பேமென்ட் பெற முடியும்.

இந்தச் சிக்கல்கள் எதிலும் சிக்காமல் இருக்க, முதலில் ஒரு ரூபாயை மட்டும் அனுப்பி, பணம் வந்துவிட்டதா என்று செக் செய்யும் யுக்தியை பலரும் பின்பற்றுகிறார்கள். இதை ஃபாலோ செய்தால்கூட நல்லதுதான்.

அதேசமயம், ‘தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டேன்’ என்று சொல்லி, அந்த பணத்தைத் திரும்ப அனுப்பச் சொல்லியும் மோசடிகள் ஆரம்பித்து விட்டன, எதுவாக இருந்தாலும் வங்கி மூலமாகத் தீர்வு காண்பதே சரியானது.

RMKV: 101 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆரெம்கேவி; 15 புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் ஆரெம்கேவி இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக, வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின், நம்பிக்கையாலும், எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாள... மேலும் பார்க்க

சூப்பர் சென்னை 'Icon of the month' விருது - சென்னையின் மதிப்பை உயர்த்திய Dr. எஸ். சந்திரகுமார்

இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. ... மேலும் பார்க்க

Pilots: விமானம் ஏறுவதற்கு முன் விமானிகள் பர்ப்யூம் பயன்படுத்தக்கூடாது; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் பணிபுரியும் விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் அல்லது அல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகளைத் தவிர்ப்பது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் மிக முக்கியமா... மேலும் பார்க்க

Social Media: ``சிரித்த பிறகாவது சிந்திப்போம்!'' - இமிடேட், மீம்ஸ் தொடர்பான ஆதங்கம்

சுடச்சுட அருமையான தேநீர்... மணம், சுவை, திடம் இப்படி ஒரு தேநீருக்குத் தேவையான அத்தனை குணங்களும் நிரம்பப்பெற்ற ஒரு தேநீரில், ஆளுக்குக் கொஞ்சம் நீரை ஊற்றினால்... எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ, அதற்குப் பயன... மேலும் பார்க்க

காலையில் கனவுகள் ஏன் வருகின்றன தெரியுமா? - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் நாம் காணும் கனவுகள், நம் மனதின் ஆழமாக இருக்கும் விஷயங்களை பிரதிபலிப்பவையாக இருக்கும். காலையில் கனவுகள் ஏன் தோன்றுகின்றன, ஏன் சிலர் இவற்றை நினைவில் வைத்திருக்கின்றனர், சிலர் ஏன் மறந்துவிடுகின்... மேலும் பார்க்க

'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க