செப். 22 முதல் ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: வேளாண்...
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசிய முகமது நபி..! 40 வயதிலும் அசத்தல்!
ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ( 40 வயது) இலங்கை வீரர் துனித் வெல்லாலகே (22 வயது) ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தை மாற்றிய முகமது நபியின் இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகள் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 18 ஓவரில் 120/7ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் முகமது நபி அசத்தலாக விளையாடினார். 19-ஆவது ஓவரில் 17 ரன்களும் 20-ஆவது ஓவரில் 32 ரன்களும் எடுத்தார்.
கடைசி ஓவரை வீசிய வெல்லாலகே ஓவரில் முகமது நபி 6, 6, 6, நோ பால் , 6, 6 அடித்தார். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் 40 வயதான முகமது நபியின் இந்தப் போராட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கன் வென்றிருந்தால், முகமது நபி ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருப்பார்.
Nabi went full 6G mode
— Sony LIV (@SonyLIV) September 18, 2025
Watch #DPWORLDASIACUP2025 - LIVE on #SonyLIV & #SonySportsNetwork TV Channels #AsiaCup#AFGvSLpic.twitter.com/suaipDl5t3