தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
மனைவியின் காலில் விழுவேன்: விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி நேர்காணல் ஒன்றில் தான் மனைவியின் காலில் விழுவேன் என்றும் அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அவரது நடிப்பில் சக்தித் திருமகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அருவி, வாழ் திரைப்படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-ஆவது படமாக சக்தித் திருமகன் உருவாகியுள்ளது.
மனைவியின் காலில் விழுவேன்
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது:
நான் சிறிய வயதிலேயே மனநிலையில் ஏற்படும் தயக்கங்களை உடைத்துவிட்டேன். எப்படி எனத் தெரியவில்லை, இயற்கையாகவே வந்துவிட்டது.
நான் எதாவது தவறு செய்துவிட்டால் என் மனைவியின் காலில் விழுந்து விடுவேன். காலினை விடவே மாட்டேன். இதை என் மகளைக் கூப்பிட்டுச் சொல்லுவேன்.
நம்மைத் தாழ்த்திக் கொள்வதிலும் என்னத் தவறு?
எனது மகளிடமும் எதாவது கோபமாக பேசிவிட்டால் அவளிடமும் காலில் விழத் தயங்கமாட்டேன்.
நம்மைத் தாழ்த்திக் கொள்வதிலும் தெரியாது என்று சொல்வதிலும் என்ன இருக்கிறது. தெரியவில்லை எனில் தெரிந்து கொள்வோம் என்றார்.
விஜய் ஆண்டனிக்கும் ஃபாதிமாவுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.