செய்திகள் :

``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜக தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

post image

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வரி மாற்றம் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி மாற்றம் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இது தேசிய அளவில் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பா.ஜ.க கூட்டணி உறுதியாக உள்ளது.”

டி.டி.டி.தினகரன்

இது வரும் டிசம்பரில் பெரிய கூட்டணியாக அமையும். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க எங்களுடன் பயணித்தவர்கள். சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

அவை விரைவில் சரி செய்யப்படும். ”பலமான கூட்டணியுடன் இணைவோம்” என, டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அது நிச்சயமாக பா.ஜ.கவாகத்தான் இருக்கும்.

அ.தி.மு.கவில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய பா.ஜ.க உதவி செய்யும். அதிமுக-வை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.

பா.ஜ.கவில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் துண்டு துண்டாக உடைந்துள்ளது.

விஜயதாரணி

உண்மையான வாக்காளர்களை கண்டறிவதில் பா.ஜ.க தெளிவாக உள்ளது. பா.ஜ.கவில் நான் பொறுப்புடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

எனக்கு என்று தனியாக எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கட்சி சொல்வதையே செயல்படுத்துவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது கட்சி தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``அமெரிக்காவின் கூடுதல் வரி வேலைக்கு ஆகாது'' - இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா

உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால்,... மேலும் பார்க்க

வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்பு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் எப்படி செயல்படும்?

சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ள Strategic Mutual Defense Agreement-இன் படி, இருநாடுகளும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை வழங்கும்.அதாவது ஏதேனும் ஒரு நாட்டை வேறொரு நா... மேலும் பார்க்க

STALIN-க்கு நன்றி சொல்லும் Amit shah? EPS-ன் CM கனவுக்கு செக்?! | Elangovan Explains

சமீபத்தில் 'அமித் ஷா - எடப்பாடி' சந்திப்பு, டெல்லியில் நிகழ்ந்தது. அங்கு, 'பிரிந்தவர்களை சேர்க்கக்கூடாது' என சில நிபந்தனைகளை எடப்பாடி விதித்தார். 'அப்படியென்றால், NDA கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் ... மேலும் பார்க்க

6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show

* "கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி* ... மேலும் பார்க்க