செய்திகள் :

யுனைடெட்டில் ஜீரோ - பார்சிலோனாவில் ஹீரோ: ஆட்ட நாயகனான மார்கஸ் ரஷ்ஃபோர்டு!

post image

சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவின் முதல் போட்டியில் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தனது முதல் கோல் அடித்த மார்கஸ் ராஷ்ஃபோர்டு ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் மார்கஸ் ரஷ்ஃபோர்டு (27 வயது) மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து லோன் மூலம் பார்சிலோன அணிக்கு இந்த சீசனில் வாங்கப்பட்டார்.

மிகவும் திறமைசாலி என மதிப்பிடப்பட்ட இவர் சில ஆண்டுகளாக சரியாக விளையாடமால் இருந்தார்.

இந்த சீசனில் பார்சிலோனாவுக்கு வாங்கப்பட்ட ரஷ்ஃபோர்டு லா லீகாவில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக்கில் நியூகேஸ்டல் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

போட்டியின் 58-ஆவது நிமிஷத்தில் ஹெட்டரிலும் 67-ஆவது நிமிஷத்தில் தனது வலது காலினாலும் ராக்கெட் போல் கோல் அடித்தார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டுசெல் அமைதியாக இருந்தார்.

முன்னாள் யுனைடெட் வீரர்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

முதல் நான்கு போட்டிகளில் சரியாக விளையாடமல் இருந்த இவரை அணியில் எடுத்தது தவறா என பேச்சுகள் எழுந்த நிலையில், அதையெல்லாம் சுக்குநூறாக்கும்படி விளையாடியுள்ளார்.

யுனைடெட்டில் ஜீரேவாக இருந்து, பார்சிலோனாவில் ஹீரோவாக மாறியுள்ளார். சாம்பியன்ஸ் லீக்கை வென்று தருவாரா எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

Marcus Rashford was Plan B for Barcelona this summer.

ஊழலுக்கு எதிரான பராசக்தி... சக்தித் திருமகன் - திரை விமர்சனம்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறையில் பிறக்கும் கிட்டு (விஜய் ஆண்டனி) என்கிற ஒரு ஆள், இந்திய அரசே திரும்பிப் பார்க்கும் விஷயத்தைச் ... மேலும் பார்க்க

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைச் சூழ்ந்த மழை நீர்: பக்தர்கள் அவதி!

கும்பகோணத்தில் பெய்த மழையினால் உலக புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழை நீர் சூழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அவதியடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உல... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட பாடகர் மரணம்!

சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட பிரபல அசாம் பாடகர் ஸுபீன் கார்க், விபத்தில் சிக்கி பலியானார். அசாமீஸ் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் (வயது 52). அசாமீஸ், ஹிந்தி மற்றும்... மேலும் பார்க்க

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

இந்தியாவில் நடைபெறும் வில்வித்தைக்கான விளம்பர தூதராக நடிகர் ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது... மேலும் பார்க்க

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

காந்தாரா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் திங்கள்கிழமையில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி, நடித்துள்ள காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா `சாப்டர் 1’-... மேலும் பார்க்க

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கால்பந்து அணிகளுக்கான உலக அளவிலான ஃபிஃபாவின் தரவரிசையில் அதிர்ச்சியளிக்கும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நடப்பு உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா கடந்த 28 மாதங்களாக முதலிடத்தில் இருந்தது. தற்போது, முதல்முறையாக ம... மேலும் பார்க்க