செய்திகள் :

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

post image

கால்பந்து அணிகளுக்கான உலக அளவிலான ஃபிஃபாவின் தரவரிசையில் அதிர்ச்சியளிக்கும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

நடப்பு உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா கடந்த 28 மாதங்களாக முதலிடத்தில் இருந்தது. தற்போது, முதல்முறையாக மூன்றாவது இடத்துக்குக் கீழிறங்கியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

மொத்தம் 48 அணிகளில் இதுவரை 18 அணிகள் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.

மார்ச்.2023 முதல் தொடர்ச்சியாக 28 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீனா, இந்த மாதத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இளம் வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதிகபட்சமாக ஸ்லோவோகியா பத்து இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தையும், ஜிம்பாப்வே மிக மோசமாக ஒன்பது இடங்கள் பின்தங்கி 125-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்திய அணி ஓரிடம் பின் தங்கி 134-ஆவது இடத்திலும் கடைசி இடத்தில் (210) சான் மரினோ இருக்கிறது.

ஃபிபாவின் புதிய தரவரிசை

1. ஸ்பெயின் - 1875.37 புள்ளிகள்

2. ஃபிரான்ஸ் - 1870.92புள்ளிகள்

3. ஆர்ஜென்டீனா - 1870.32புள்ளிகள்

4. இங்கிலாந்து - 1820.44புள்ளிகள்

5. போர்ச்சுகல் - 1779.55புள்ளிகள்

6. பிரேசில் - 1761.6 புள்ளிகள்

7. நெதர்லாந்து - 1754.17 புள்ளிகள்

8. பெல்ஜியம் - 1739.54 புள்ளிகள்

9. குரேஷியா - 1714.2 புள்ளிகள்

10. இத்தாலி - 1710.06 புள்ளிகள்

There have been shocking changes in FIFA's global rankings for football teams.

யுனைடெட்டில் ஜீரோ - பார்சிலோனாவில் ஹீரோ: ஆட்ட நாயகனான மார்கஸ் ரஷ்ஃபோர்டு!

சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவின் முதல் போட்டியில் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தனது முதல் கோல் அடித்த மார்கஸ் ராஷ்ஃபோர்டு ஆட்ட நாயகனாக தேர்வானார். இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து... மேலும் பார்க்க

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

இந்தியாவில் நடைபெறும் வில்வித்தைக்கான விளம்பர தூதராக நடிகர் ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது... மேலும் பார்க்க

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

காந்தாரா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் திங்கள்கிழமையில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி, நடித்துள்ள காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா `சாப்டர் 1’-... மேலும் பார்க்க

டொவினோ தாமஸ் - நஸ்ரியாவின் புதிய படம்!

நடிகர் டொவினோ தாமஸின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நஸ்ரியா நஸிம் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகளைப் படக்குழு தேர்வு செய்துவருகிறது.மலையாளத்தின் முன்... மேலும் பார்க்க

மனைவியின் காலில் விழுவேன்: விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி நேர்காணல் ஒன்றில் தான் மனைவியின் காலில் விழுவேன் என்றும் அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது நடிப்பில் சக்தித் திருமகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிய... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உ... மேலும் பார்க்க