5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!
விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ரசிகர்களுக்கு விருந்து!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம், ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிக்கும் என்று இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துவரும் ஜனநாயகன், அவரின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ஜனநாயகன் இயக்குநர் எச்.வினோத் பேசுகையில்,
``இது விஜய் சாரோட ஒரு பக்கா ஃபேர்வெல் படம். இதில் மாஸ், கமெர்ஷியல், ஆக்ஷனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்’’ என்று தெரிவித்தார்.
அனிருத் இசையில், நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்கும் ஜனநாயகன், அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க:டொவினோ தாமஸ் - நஸ்ரியாவின் புதிய படம்!