செய்திகள் :

நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

post image

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பரப்புரைக்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (செப். 20) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள பரப்புரையின்போது, காவல்துறையினரின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

புத்தூர் அண்ணா சிலை அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதியளித்துள்ள காவல்துறை, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.

  • பரப்புரையில் நண்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.

  • கட்சித் தலைவர் விஜய் செல்லும் பகுதியில், 2 பிரதான கட்சிகள் இருப்பதால், பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு தன்னார்வலர்களை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • ரவுண்டானா பகுதியானது, தமிழ்நாடு - புதுவை எல்லை என்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக் கூடாது.

  • விஜய்யின் பரப்புரை வாகனத்தின் பின்னே 5 வாகனங்களுக்குமேல் செல்லக் கூடாது.

  • பரப்புரைக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியை தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

  • பெண்கள் மற்றும் பெரியவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

  • அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது. சேதம் ஏற்பட்டால், கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும் உள்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய் செல்லவிருக்கும் வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்யுமாறு மின் பொறியாளர் அலுவலகத்தில் தவெகவின் நாகை மாவட்டச் செயலாளர் மனு அளித்துள்ளார்.

அதன்படி, விஜய் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யயுள்ள புத்தூர் அண்ணா சிலை அருகில் வருகைபுரிந்து மக்களை சந்தித்து உரையாற்றயுள்ளார்.

இவ்வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும்வரை அவ்வழியில் உள்ள வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Conditions for TVK Vijay's Campaign

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு கட்சித் தலைமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், நம் வெற்றித் தலைவர் விஜய், தமிழகம் முழுவது... மேலும் பார்க்க

விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம், ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிக்கும் என்று இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துவரும் ஜனநாயகன், அவரின் கடைசிப் படம் என்பதால், ரச... மேலும் பார்க்க

வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வேலுநாச்சியாரின் பெயர்! - முதல்வர் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவல... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.செப். 19 தமிழகத்தில் ஒருசில இடங்களில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கரும்பு வெட்டும் அண்ணன், தம்பி பலி!

விழுப்புரத்தில் கரும்பு வெட்டச் சென்ற சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க