செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 1415.90 மில்லியன் கன அடியாகவும் அணையின் நீர்மட்டம் 49.75 அடியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,126 கன அடியாக உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு 3,126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரையில் அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, தாழ்வான மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

water released from Krishnagiri Dam Flood warning for 3 districts

வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வேலுநாச்சியாரின் பெயர்! - முதல்வர் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ... மேலும் பார்க்க

நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பரப்புரைக்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (செப். 20) காலை 11 மணியளவில் நட... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.செப். 19 தமிழகத்தில் ஒருசில இடங்களில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கரும்பு வெட்டும் அண்ணன், தம்பி பலி!

விழுப்புரத்தில் கரும்பு வெட்டச் சென்ற சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈட... மேலும் பார்க்க

நாகை: நாளை விஜய் பரப்புரையில் இடம் மாற்றம்!

நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதியளித்தது.அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈ... மேலும் பார்க்க