செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

post image

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்களின் பயங்கரவாத தலைமையிடம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த மே 7 அன்று நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் நடத்தியது.

இதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் இறந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் உயிரிழந்தது உண்மைதான் என்று தாக்குதல் நடந்த 4 மாதங்களுக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி ஒரு விடியோவில், 'மே 7 அன்று பஹவல்பூரில் ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் அஸாரின் குடும்பம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது' என்று பேசியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவர்.

லஷ்கர்-இ- தொய்பாவும் ஒப்புக்கொண்டது

ஜெய்ஷ் அமைப்பைத் தொடர்ந்து லஷ்கர்-இ- தொய்பா அமைப்பும் ஆபரேஷன் சிந்தூரில் இழப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.

மே 7 அன்று இந்தியா நடத்திய தாக்குதலில் அழிந்த 9 பயங்கரவாத இடங்களில் லஷ்கரின் தலைமையிடமான முரிட்கே(muridke) முகாமும் ஒன்றாகும்.

இந்நிலையில் விடியோ ஒன்றில், மே 7 தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்கே பயங்கரவாத முகாம், முன்பைவிட மிகப்பெரியதாக மீண்டும் கட்டப்பட்டு வருவதாக லஷ்கர் பயங்கரவாத தளபதி காசிம் கூறியுள்ளார்.

"இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபா கட்டட இடிபாடுகளில் நான் நிற்கிறேன். அதை மீண்டும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடவுளின் அருளால இந்த மசூதி முன்பைவிட பெரியதாக கட்டப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த இடத்தில் பயங்கரவாதிகள் பலரும் பயிற்சி பெற்றதாகவும் காசிம் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், அழிக்கப்பட்ட இந்த கட்டடத்தை பயங்கரவாதக் குழு பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

After Jaish Now Lashkar Terrorist admits Pak Op Sindoor Claims

இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!

செபி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.மார்ச் மாதத்தில் செபி தலைவராகப் பதவியேற்ற துஹுன் காந்த பாண்டேவுக்கு சொகுசு குடியிருப்பை செபி ஏ... மேலும் பார்க்க

மேலும் 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத மேலும் 474 அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்ட கட்... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மேலும் 5 உடல்கள் மீட்பு: பலி 7ஆக உயர்வு

உத்தரகண்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் புதைந்த மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்ப... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அம... மேலும் பார்க்க

ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்ற... மேலும் பார்க்க