யுனைடெட்டில் ஜீரோ - பார்சிலோனாவில் ஹீரோ: ஆட்ட நாயகனான மார்கஸ் ரஷ்ஃபோர்டு!
காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!
காந்தாரா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் திங்கள்கிழமையில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி, நடித்துள்ள காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா `சாப்டர் 1’-இன் டிரைலர் திங்கள்கிழமையில் (செப். 22) பகல் 12.45 மணியளவில் வெளியாகவுள்ளது.
தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான காந்தாரா. 1990-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது. முதல் பாகத்தின் மீதான வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அக்டோபர் 2 ஆம் தேதியில் வெளியாகவுள்ள காந்தாரா சேப்டர் 1 திரைப்படம், 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க:டொவினோ தாமஸ் - நஸ்ரியாவின் புதிய படம்!
