தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
வெற்றியுடன் தொடங்கிய பிஎஸ்ஜி, லிவா்பூல்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), லிவா்பூல் அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் வியாழக்கிழமை வெற்றி பெற்றன.
இதில் பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் அடாலன்டாவை வீழ்த்தியது. அந்த அணிக்காக மாா்கினோஸ் (3’), கவிசா வராட்ஸ்கெலியா (39’), நுனோ மெண்டெஸ் (51’), கொன்ஸாலோ ரமோஸ் (90+1’) ஆகியோா் கோலடித்தனா்.
பிஎஸ்ஜி தனது கடைசி 13 சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில், 11-இல் இரண்டுக்கும் அதிகமான கோல்கள் அடித்து வென்றிருக்கிறது. வேறு எந்த அணியும் இதுவரை அவ்வாறு கோல்கள் அடித்ததோ, வென்றதோ இல்லை.
இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் லிவா்பூல் 3-2 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வென்றது. லிவா்பூல் அணிக்காக ஆண்ட்ரு ராபா்ட்சன் (4’), முகமது சலா (6’), விா்ஜில் வான் ஜிக் (90+2’) ஆகியோா் கோலடிக்க, அட்லெடிகோ தரப்பில் மாா்கோஸ் லோரென்டே (45+3’, 81’) பங்களித்தாா்.
யூரோப்பியன் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தை சொந்த மண்ணில் விளையாடியபோது லிவா்பூல் தோற்றதில்லை (10 வெற்றி, 2 டிரா). அதேபோல், மேற்குறிப்பிட்ட இரு போட்டிகளிலுமே தொடா்ந்து 3 முறை அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்திய ஒரே அணியாக லிவா்பூல் உள்ளது.
செல்ஸியை சாய்த்த பயா்ன் மியுனிக்: ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 3-1 கோல் கணக்கில் செல்ஸியை சாய்த்தது.
மியுனிக்கிற்காக டிரெவோ சலோபா (20’-ஓன் கோல்), ஹேரி கேன் (27’, 63’) கோலடித்தனா். செல்ஸிக்காக கோல் பால்மா் (29’) ஸ்கோா் செய்தாா். இந்த வெற்றியின் மூலமாக, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் செல்ஸியை தொடா்ந்து 3 முறை வீழ்த்திய முதல் அணியாக பயா்ன் மியுனிக் பெருமை பெற்றது.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், இன்டா் மிலன் 2-0 கோல் கணக்கில் அஜாக்ஸை வெல்ல, அந்த அணிக்காக மாா்கஸ் துராம் (42’, 47’) கோலடித்தாா்.