பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!
வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 19 - 25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
அனைவரிடம் கனிவாகப் பேசி காரியத்தைச் சாதித்துக்கொள்வீர்கள். பூர்விக சொத்துகளில் சுமுகமாக பாகப்பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நெருங்கிப் பழகுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு நேரடியாக பிரச்னை செய்தவர்கள் அடங்கிவிடுவார்கள். கலைத்துறையினரின் முகத்தில் மலர்ச்சியும் பொலிவும் காணப்படும். பெண்களுக்கு புத்தாடைகள், அணிகலன்கள் சேரும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
அனைத்துக் காரியங்களும் நீங்கள் நினைத்தது போலவே நடக்கும். அசையாச் சொத்து ஆதாயம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
உத்தியோகஸ்தர்கள் பணிகளை செவ்வனே செய்துமுடிப்பீர்கள். வியாபாரிகளுடன் கூட்டாளிகள் நட்பாகப் பழகுவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் சாதனைகளைச் செய்வீர்கள். பெண்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மாணவர்களுக்கு விரும்பிய பாடம் படிக்க வாய்ப்பு அமையும்.
சந்திராஷ்டமம் - இல்லை
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
உடல், மனம் இரண்டும் ஆரோக்யமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் புரிதல் ஏற்படும். வியாபாரிகள் கடையை அழகுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு பழைய
பாக்கிகள் வசூலாகும்.
அரசியல்வாதிகள் தங்கள் கடமையை நேர்த்தியாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் சிறிய வாய்ப்புகளையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெண்கள் ஆலயத் திருப்பணிகளிலும் தரும காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு முன்னேற்றம் தரும்.
சந்திராஷ்டமம் - இல்லை
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். திடீர் பயணங்கள் செய்வீர்கள். முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு சேமிப்பு உயரும். விவசாயிகள் கையிலிருக்கும் குத்தகைகளை நேர்த்தியாகச் செய்துமுடிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் முக்கிய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். மாணவர்கள் யோகா,
பிராணாயாமம் செய்து மேன்மை பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
தொழிலில் ஏற்றம் உண்டாகும். உறுதியுடன் செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். சமுதாயத்தில் தனியிடம் பிடிப்பீர்கள். குழந்தைகளைக் கண்காணிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். வியாபாரிகளின் முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகள் மதிக்கப்படுவீர்கள்.
அரசியல்வாதிகள் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு கணவர் வழி உறவினர்களால் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் புதிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தொழிலை சீராக நடத்துவீர்கள். அரசாங்க உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டீர்கள். வியாபாரிகள் நல்ல முறையில் பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். பெண்களுக்கு குழப்பங்கள், மனபயம் மறைந்துவிடும். மாணவர்கள் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
மற்றவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச்செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரின் ரகசிய திட்டங்களை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் தொடர் வருமானம் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளுவை சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டுவீர்கள். கலைத்துறையினர் புகழ், பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் பெரியவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் பெற்றோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
தொழிலில் இருந்த தேக்கநிலை மாறும். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சில நன்மைகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு சக விவசாயிகளிடமிருந்து உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் நன்றாகப் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
ஆரோக்கியம் சீர்படத் தொடங்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் நட்பாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிரிகள் அடங்கி நடப்பார்கள்.விவசாயிகள் நல்ல முறையில் பயிர் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்கள் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 19, 20, 21.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். தொழிலில் முக்கிய இலக்கை எட்டுவீர்கள். சேமிப்புகளை உயர்த்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். விவசாயிகள் புதிய யுத்திகளைப் புகுத்தி பயிர் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சில ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை நல்ல முறையில் தொடரும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 22, 23.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலை வெளியூர்களுக்கு விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சகஜமாகப் பழகுவீர்கள். விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்வீர்கள். பெண்களுக்கு உடலும் மனமும் பலப்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 24, 25.