செய்திகள் :

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க!: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வு கால பலன்கள் வழங்கப்படுவதில்லை. இப்போதைய நிலையில் 16 மாத காலம் ஓய்வு கால பலன்கள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றில் பல்வேறு பிரச்சனை உள்ளது.

பணி காலத்தில் தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி பணம் உரிய கணக்குகளில் செலுத்தப்படுவதில்லை. பணிக்கொடை டிரஸ்ட்டுக்கும் பணம் செலுத்தப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கும் பல்வேறு நிலுவைகள் உள்ளன. ஒட்டு மொத்தத்தில் ரூ.15000 கோடி தொழிலாளர்கள் பணம் கழக நிர்வாகத்தால் செலவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதற்கு இதுவே அடிப்படை காரணமாகும்.

1.4.2003-க்கு பின் பணிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது அது நிறைவேற்றப்படவில்லை.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆகஸ்ட் 18 முதல் சிஐடியு சார்பில் 22 மையங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு போராட்டத்தை ஒட்டி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்க தலைவர்களை அழைத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசினார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பயன்கள் தீபாவளிக்கு முன்பாக வழங்க அரசு முன்வர வேண்டும், தொழிலாளர்களின் ஒப்பந்த நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது சம்பந்தமாக தொழிற்சங்கங்களோடு அரசு விவாதிக்க வேண்டும், தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நிதித்துறையுடன் பேசிவிட்டு தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி 32 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

CPI(M) urges Tamil Nadu government to address transport workers' legitimate demands

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலும் மூழ்கியது!

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒடுக்கத்தூரில் இருந்து நேமந்தபுரம் இடையே செல்லக்கூடிய ஆற்று தரைபாலம் மூழ்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், வேல... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்!

ஆப்பிள் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 17 மாடல் போனைப் பெறுவதற்கு தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தனது புதி... மேலும் பார்க்க

சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக பிரமுகர் செய்தியாளர்களைத் தரக்குறைவாக வசைபாடி தாக்க முயன்ற சம்பவம் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு

ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்

!சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81.840-க்கு விற்பனையாகிறதுது.சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன்... மேலும் பார்க்க

நடிகா் ரோபோ சங்கா் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: நடிகா் ரோபோ சங்கா் (46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவ... மேலும் பார்க்க