செய்திகள் :

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

post image

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த மாதம் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் நேற்று செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது, சேர்க்கப்பட்டது குறித்த மேலும் ஆதாரங்களைக் காட்டினார்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதே தவிர, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல் நேற்று பேசுகையில், வெறும் 36 நொடிகளில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று ராகுல், தான் பேசிய விடியோ ஒன்றைப் பகிர்ந்து

"அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்கள்!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது!

தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், திருடர்களைப் பாதுகாக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

Wake up at 4 am, delete voters, go to sleep: Rahul Gandhi on vote chori

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததாக காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவு கொள்கை, வாக்குத் திருட்டு, அதானி குழும விவ... மேலும் பார்க்க

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்டில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்... மேலும் பார்க்க

செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?

செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. பூமியின் தெற்கு கோளப் பகுதியில் மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ... மேலும் பார்க்க

டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.வந்தே பாரத் ... மேலும் பார்க்க

லலித் மோடியின் சகோதரர் பாலியல் வழக்கில் கைது!

நாட்டில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக பெறப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்த... மேலும் பார்க்க