ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்
விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்; சீனாவில் புதிய வினோத நடைமுறைக்கு குவியும் கண்டனங்கள்!
சீனாவில் உள்ள பொதுக் கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பரை வீணாக்குவதைத் தடுக்கும் நோக்கில், அதைப் பெறுவதற்கு முன் பயனர்கள் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வினோத நடைமுறைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் உள்ள சில பொதுக் கழிப்பறைகளில், டாய்லெட் பேப்பர் வழங்கும் இயந்திரத்தில் QR குறியீடு பொருத்தப்பட்டுள்ளது.
விளம்பரத்தைப் பார்க்க விரும்பாதவர்கள், 0.5 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5) செலுத்தி நேரடியாக டாய்லெட் பேப்பரைப் பெற்றுக்கொள்ளலாம்.

பயனர்கள் தங்கள் தொலைபேசி மூலம் அதை ஸ்கேன் செய்த பிறகு, ஒரு சிறிய விளம்பரத்தைப் பார்க்க வேண்டும். விளம்பரம் முடிந்தவுடன், இயந்திரம் குறிப்பிட்ட அளவு டாய்லெட் பேப்பரை வழங்கும்.
அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தி பணமாக்கும் சீனாவின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் கடுமையாக கண்டங்கள் எழுந்துள்ளன.
அவசரமான சூழ்நிலைகளில் ஒருவரது தொலைபேசியில் சார்ஜ் இல்லாமல் இருக்கலாம், இணைய இணைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது சில்லறைப் பணம் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில் அவர்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் வழங்கப்படும் டாய்லெட் பேப்பரை சிலர் தேவைக்கு அதிகமாக எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!