Robo Shankar: ``கடந்த வாரம்கூட ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றோம், ஆனால்'' - க...
உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலும் மூழ்கியது!
உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒடுக்கத்தூரில் இருந்து நேமந்தபுரம் இடையே செல்லக்கூடிய ஆற்று தரைபாலம் மூழ்கியது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்திலும் கடந்து சில நாட்களாக பகல் மற்றும் இரவில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக ஜவ்வாது மலை தொடரில் உருவாகும் வெள்ளத்தால் ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உத்தரகாவிரி ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஒடுக்கத்தூரில் இருந்து நேமந்தபுரம் இடையே செல்லக்கூடிய ஆற்றில் உள்ள தரைபாலம் மூழ்கியது.
மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கட்டுமானம் பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கிச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் மக்கள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.