Robo Shankar: ``கடந்த வாரம்கூட ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றோம், ஆனால்'' - க...
``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து பேசிய தினகரன், “பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. எங்களை கூட்டணிக்கு அண்ணாமலைதான் கொண்டு வந்தார். என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர். தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவது அதிர்ச்சியாக இருந்தது.” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரும் இதே கருத்தைக் கூறியிருந்தனர். இந்த அழுத்தத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து வந்துள்ளார்.
முகத்தை மறைத்தபடி காரில் செல்லும் பழனிசாமியின் வீடியோ வைரலாகி பேசுபொருளாகி இருந்தது.
எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் இருக்க முடியாது
இதையடுத்து, சென்னை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன்,
“பாஜகவில் எப்போது அண்ணாமலை மாநில தலைவர் பதவியிலிருந்து வெளியேறி, நயினார் நாகேந்திரன் பதவியேற்றாரோ அப்போதே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.
எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் NDA கூட்டணியின் தலைவராக சரியான நபரைத் தேர்ந்தெடுப்போம் என்று நயினார் கூறினார்.
ஆனால், எடப்பாடி தலைமையிலான கூட்டணி அமைக்கிறது என்றவுடனே, NDA கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்துவிட்டோம்.”

மாற்றம் வரும் என்று கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்த்தோம். எந்த மாற்றமும் இல்லாததால், மூன்று மாதங்களுக்கு முன்பே NDA கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம். அதை பொதுவெளியில் தாமதமாகக் கூறினோம்.
என்னை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேச முயற்சி செய்தனர்.
இதுதவிர வேறெந்த காரணமுமில்லை, தூண்டுதலுமில்லை. என்னை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேச முயற்சி செய்தனர்.
நானும், அண்ணாமலையும் டெல்லிக்குச் செல்வதாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகவும், கூட்டணி தலைவராகவும் ஏற்க முடியாது என்பதுதான் NDA கூட்டணியிலிருந்து வெளியேறக் காரணம்" என்று உடைத்துப் பேசியிருக்கிறார்.
மேலும், "டிசம்பர் மாதம் நல்ல செய்தி வரும்" என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs