செய்திகள் :

TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார்.

பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜய் வீட்டில் வேலை செய்யும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் வீட்டில் வேலை செய்பவர்கள், உடனடியாக அந்த இளைஞர் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் அருண் (24) என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் (IMH) நீலாங்கரை போலீசார் சேர்த்தனர்.

இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி விஜய் வீட்டின் மொட்டை மாடிக்கு அவர் எப்படி சென்றார்? யார் கண்ணிலும் படாமல் எப்படி சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்

மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான... மேலும் பார்க்க

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவண... மேலும் பார்க்க

Kamal: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?"- கமல் சொன்ன பதில்

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலர... மேலும் பார்க்க

தென்காசி: "வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்ட... மேலும் பார்க்க

Youtube: யூடியூப் சேனல்களுக்கும் லைசென்ஸ் அவசியம்; கர்நாடக அரசின் திட்டமும், தர்மஸ்தலா பின்னணியும்?

கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையைக் கொண்டுவர கர்நாடக அரசு ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி: "இபிஎஸ்-ஐ கலந்தாலோசிக்காமல், எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது" - ஹெச்.ராஜா பேட்டி

"தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகிவிட்டாரே?" "தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி.தினகரனும் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது. மக்கள் விரோத... மேலும் பார்க்க