அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோர...
வயநாட்டில் சோனியா, ராகுல் காந்தி!
கேரள மாநிலம் வயநாட்டுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாகவே வயநாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அந்த தொகுதியின் எம்பியுமான பிரியங்கா காந்தி ஆய்வுக் கூட்டங்கள் பங்கேற்று வருகின்றார்.
தில்லியில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் பயணம் மேற்கொண்ட சோனியா மற்றும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைந்தனர்.
அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் சோனியா மற்றும் ராகுல் காந்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
கேரளத்தில் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்புடன் ஆலோசிக்கவுள்ளனர்.
மேலும், வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் கேட்கவுள்ளனர்.
பிரியங்கா காந்தியின் வயநாடு பயணம் செப். 21 வரை திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அதுவரை சோனியாவும் ராகுலும் வயநாட்டில் தங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.