செய்திகள் :

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

post image

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.

மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பியது. ஆனால், சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியதால் உயிரிழந்தது.

Ambulance

மும்பை குர்லாவை சேர்ந்த 16 மாத வயது ரியான் ஷேக் தனது பெற்றோருடன் மும்பை அருகே உள்ள நாலாசோபாரா என்ற இடத்தில் உள்ள பாத்திமா மன்சில் என்ற கட்டிடத்தில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தான்.

அங்கு ரியான் ஷேக் பாட்டி வீட்டில் பால்கனியில் தடுப்பு அமைக்கப்படாமல் இருந்தது. பால்கனியில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, காயத்துடன் சிறுவன் உயிர் பிழைத்தான்.

உடனே அவனை பெற்றோர் அங்குள்ள கேலக்சி மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கிருந்த டாக்டர் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக வேறு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சிறுவனை அந்தேரி சாக்கி நாக்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அவர்கள் தங்களது காரில் சிறுவனை எடுத்துச்சென்றபோது, மும்பை–அகமதாபாத் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

4 மணி நேரமாக மீராரோடு பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாலை 7 மணிக்கு சிறுவன் மயக்க நிலைக்கு சென்றான். உடனே அருகில் உள்ள டாக்டரிடம் சிறுவனை கொண்டு சென்று காட்டியபோது உயிரிழந்திருந்தான்.

நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்த சிறுவன் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதே பகுதியிலே கடந்த ஜூலை மாதம், மரம் ஒன்று ஒடிந்து விழுந்து காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இதே போன்று போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

வசாய்–விரார் இடையே பகல் நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கின்றன, இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி | Photo Album

தொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிகேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வாக்குரிமை..... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் பலி; போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழ... மேலும் பார்க்க

``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்

டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்‌ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப... மேலும் பார்க்க

கர்நாடகாவில் கோர விபத்து; விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (செப்டம்பர்.12) இர... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பாலிவுட் நடிகை கரிஷ்மா காயம்; மருத்துவமனையில் சிகிச்சை

பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்... மேலும் பார்க்க

திருப்பூர்: போதையில் காரை ஓட்டி விபத்து; முதியவர் உயிரிழப்பு.. திமுக பேரூராட்சித் தலைவரிடம் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாம... மேலும் பார்க்க